ஜூன் 07
வேலூர் மாவட்டம்
வேலூர் மாவட்ட காவல் அலுவலகத்தில் இயங்கி வரும் மாவட்ட குற்றப்பிரிவில் சென்னை ஆலந்தூர் பகுதியை சேர்ந்த ரகுவீரபாண்டியன் என்பவர் கடந்த 26.10.2023-ம் தேதி அளித்த புகாரில் தனக்கும் கெஜலட்சுமி என்பவருக்கும் திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக தற்போது பிரிந்து வாழ்வதாகவும் தாங்கள் ஒன்றாக வாழ்ந்த காலத்தில் இருவரின் பெயரில் வாங்கிய (8 ஏக்கர் 11 சென்ட்) சொத்தினை தாங்கள் பிரிந்து வாழ்ந்து வரும் காலத்தில் நான் வெளிநாட்டில் பணி புரிந்து கொண்டிருக்கும் போது போலியான வாழ்நாள் சான்றிதழை (LIFE CERTIFICATE ) தயார் செய்து தனக்கு தெரியாமல் அந்த சொத்தை வேறு ஒரு நபருக்கு விற்பனை செய்ததாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் நெ. மணிவண்ணன் இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை காவல் கண்காணிப்பாளர் சாரதி அவர்களின் வழிகாட்டுதலின்படி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பாபு இரவிச்சந்திரன் (ALGSC) அவர்களின் தலைமையிலான போலீசார் நேற்று 06.06.2024-ம் தேதி எதிரி கெஜலட்சுமி (வயது 49) சோளிங்கநல்லூர்,
சென்னை. என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment