போக்குவரத்து காவல் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் சான்றிதழ் வழங்கி பாராட்டு. - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 8 June 2024

போக்குவரத்து காவல் பயிற்சி பெற்ற கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் என்.மணிவண்ணன் சான்றிதழ் வழங்கி பாராட்டு.

ஜூன் 08

வேலூர் மாவட்டம் 
வேலூர் மாவட்ட காவல்துறையுடன் இணைந்து கல்லூரி மாணவர்கள் தன்னார்வ தொண்டு நிறுவன உறுப்பினர்கள் இணைந்து போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு குறித்து இரண்டு மாதங்கள் நடைபெற்ற பயிற்சியினை நிறைவு செய்ததுடன் இரண்டு மாதங்களாக போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவதற்காக போக்குவரத்து காவல்துறையோடு இணைந்து பணியாற்றியதற்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு இன்று வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக அரங்கில் நடைபெற்றது 
நிகழ்விற்கு வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர் என்.மணிவண்ணன் அவர்கள் தலைமை தாங்கி சான்றிதழ்களை வழங்கிப் பேசினார்.

கூடுதல் கண்காணிப்பாளர் என்.கோடீஸ்வரன் முன்னிலை வகித்தார். வேலூர் போக்குவரத்து பாதுகாப்பு குழுவின் துணைத் தலைவரும் போக்குவரத்து காவல் குழும துணைத் தலைவருமான எஸ் ரமேஷ்குமார் ஜெயின் வரவேற்ற பேசினார். வேலூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் வெ.அறிவழகன்,  போக்குவரத்து காவல் குழும செயலாளர் டாக்டர் அ.மு இக்ராம் துணைத் தலைவர் ஆர்.சீனிவாசன் உறுப்பினர்கள் செ.நா. ஜனார்த்தனன் டாக்டர் வி.தீனபந்து பி.என்.ராமச்சந்திரன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்.

 பயிற்சி முடித்த 30 மாணவர்களுக்கும்  பயிற்சியினை யும் மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும் பணியிலும் ஈடுபட்ட போக்குவரத்து காவல் குழுமத்தின் செயலாளர் டாக்டர் அ.மு.இக்ராம், குழுவின் துணைத் தலைவர்கள் ஆர் சீனிவாசன் எஸ் ரமேஷ் குமார் முனைவர் செ.நா.ஜனார்த்தனன்,  பி என் ராமச்சந்திரன் டாக்டர் வி. தினபந்து உள்ளிட்டோருக்கும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார். 
தொடர்ந்து சைபர் (கணினி மற்றும் இணைய வழி ) குற்றப் பிரிவின் உதவி ஆய்வாளர் மாலதி அவர்கள் மொபைல் போன் வழியாக நடைபெறும் குற்றங்களும் அதில் இருந்து விடுபடுவதற்கான விழிப்புணர்வு கருத்துக்களையும் எடுத்துக் கூறினார் மேலும் சைபர் குற்றப்பிரிவிலிருந்து மீள்வதற்கான நடைமுறைகளும் எடுத்துரைத்தார்
முடிவில் போக்குவரத்து காவல் குழும உறுப்பினர் செ.நா.ஜனார்த்தனன் நன்றி கூறினார்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad