பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் மேல்நிலைபள்ளிகளில் தொழிற்கல்வி மறு சீரமைப்பு என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் நன்றி வரவேற்பு - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday 26 June 2024

பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் மேல்நிலைபள்ளிகளில் தொழிற்கல்வி மறு சீரமைப்பு என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் நன்றி வரவேற்பு

வேலூர் ஜூன் 26

வேலூர் மாவட்டம் பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையில் மேல்நிலைபள்ளிகளில் தொழிற்கல்வி மறு சீரமைப்பு
என அறிவித்துள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் நன்றி தெரிவித்து வரவேற்றனர்.

11 மற்றும் 12-ம் வகுப்புக்கான தொழிற்கல்வி பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகங்கள் மறு சீரமைப்பு செய்யப்பட்டுள்ளன என தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்ட பள்ளிக்கல்வி மான்ய கோரிக்கையில்  பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.  இதனை தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகம் வரவேற்றுள்ளது  தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினக்கு நன்றி தெரிவித்துள்ளது.
இது குறித்து தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவரும் இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய மற்றும் மாநில செயற்குழு உறுப்பினருமான செ.நா.ஜனார்த்தன்ன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.

 தமிழகத்தில் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் தற்பொழுது நடைமுறையில் உள்ள தொழிற்கல்வி பாடங்கள் மறு சீரமைக்கப்பட்டு தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்துடன் இணைந்து மாணவர்களின் கற்றல் அனுபவம் மற்றும் தொழில்துறையின் வெளிப்பாட்டை பெறுவது ஆகியவற்றை மையமாகக் கொண்டு எதிர்கால தலைமுறைகளின் மேல் நோக்கிய வளர்ச்சி மற்றும் வேலை வாய்ப்பை மேம்படுத்த 8 தொழிற்கல்வி பாடங்களின் பாடத்திட்டம் மற்றும் பாடப்புத்தகம் மறு சீரமைக்கப்பட்டுள்ளது 
தொழிற்கல்வி பாடம் சார்ந்து ஆறாவது பாடமாக வேலை வாய்ப்பு திறன்கள் என்னும் புதிய பாடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது 
இத்திட்டத்தின் மூலம் 11 ஆம் வகுப்பில் 13,185 பேரும் 12 ஆம் வகுப்பில் 14 ஆயிரத்து 306 பேரும் பயனடைந்துள்ளனர்.  மேலும் தொழிற் துறையால் அங்கீகரிக்கப்பட்ட திறன் நிறைவு சான்றிதழைப் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்ட்டுள்ளது.  இதன் மூலம் மெல்லக் கற்கும் தொழிற்கல்வி மாணவர்கள் திறன் நிறைச் சான்றிதழும் அரசு பொதுத்தேர்வின் இயல்பான சான்றிதழும் என இரண்டு சான்றிதழ்கள் பெறும் வாய்பினை பெற்றுள்ளனர்.  இதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும் பள்ளிக்கல்வி அமைச்சர் மாண்புமிகு அன்பில்மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கின்றோம்.
ஆனால் அதே வேளையில் தற்பொழுது தமிழகத்தில் உள்ள சுமார் 3227 அரசு மற்றும் அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிகளில் வெறும்  சுமார் 500 மேல்நிலைப் பள்ளிகளில் மட்டுமே இந்த தொழிற்கல்வி பாடப்பிரிவு நடைமுறையில் உள்ளது.
அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் தொழிற்கல்வி பாடம் ஒன்றினை கட்டாயமாக்க வேண்டும் என்கின்ற ஒரு வேண்டுகோளையும் தமிழக அரசுக்கு நாங்கள் முன்வைக்கின்றோம்.
மேலும் மெல்ல கற்கும் மாணவர்கள் உயர்கல்வி பெறும் வாய்ப்பினை மறுக்கும் சூழல் ஏற்படுகின்றது. ஒரு முறைக்கு மேல் தோல்வி அடைந்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பொதுப்பாட பிரிவுகளிலே அறிவியல் பிரிவிலோ அல்லது கலை பிரிவிலோ சேர்க்கப்படுவதில்லை இதனால் இந்த மாணவர்கள் உயர் கல்வி பெற இயலாத சூழல் ஏற்படுகின்றது மேலும் பாலிடெக்னிக் அல்லது ஐடிஐயில் சேர வேண்டும் என்று சொன்னால் அவர்கள் வெகு தொலைவுக்கு சென்று கல்வி பெறவேண்டிய தேவை ஏற்படுகிறது எனவே மெல்ல கற்கும் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மேல்நிலைப் பள்ளிகளிலும் ஒரு தொழிற்கல்விப் பாடத்தையாவது கட்டாய பாடமாக தமிழ்நாடு அரசு அறிவிக்க வேண்டும் என்று தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் சார்பில் கேட்டுக்கொள்கின்றோம்.
இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு அரசுப்பள்ளிகளுக்க இணையாக வசதிகள் செய்து தரப்படவேண்டுமென கோரிக்கை வைத்தோம் எங்களுடைய கோரிக்கையினை ஏற்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் உயர் தொழில் நுட்ப ஆய்வகங்கள் 42 கோடி ரூபாய் செயலவில் அமைக்கப்படும் என்ற அரசின் அறிவிப்பினை வரவேற்கின்றோம்.
மேலும் மாணவர்களுக்கான நன்னெறி செயல்பாடுகள், ஆசிரியர்களுக்கு தொல்லியல் பயிற்சி, மாணவர்களின் உயர்கல்வி செலவினை அரசு எற்றுக்கொள்ளுதல், மாணவிகளின் உடல்,மன வழிகாட்டுதலுக்காக அகல்விளக்கு திட்டம், 6ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கணினி அறிவியல் பாடம் உள்ளிட்ட அரசின் திட்டங்களை மனதார வரவேற்கின்றோம்.
மேலும் பள்ளி வேலை நாட்கள் 200 நாட்கள் என பல்வேறு கல்விக்குழுக்களின் பரிந்துரையின் படி நடைமுறையில் இருந்தது இதனை 203, 207, 210 நாட்கள் என ஆண்டு தோறும் உயர்த்தி தற்போது நடப்பு கல்வியாண்டில் 220 நாட்கள் என அறிவித்துள்ளது ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே மன உளைச்சளை ஏற்படுத்தியுள்ளது.  மேலும் அரசு ஊழியர்கள் அனைவரும் சனிக்கிழமை விடுமுறை நாட்களாக உள்ள நிலையில் ஆசிரியர்கள் மட்டும் வாரத்தில் இரண்டு சனிக்கிழமை வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.  எனவே தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை உடன் மேற்கொண்டு பள்ளி வேலை நாட்களை முன்பு நடைமுறையில் இருந்தது போல் 200 நாட்களாக மாற்றி அறிவிக்க வேண்டுகின்றோம்.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad