குடியாத்தம் ஜூன் 27
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கல்லேரி கிராமத்தில் பட்டியலின மக்களுக்கு 280 பட்டா வழங்கப்பட்டது. பட்டா கொடுத்தும் இதுவரை பாதை அமைத்து அளந்து கல்நட்டு தரவில்லை இதை கண்டித்து பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் இந்திய குடியரசு கட்சியினர் காத்திருப்பு போராட்டம் உண்ணாவிரதம் உள்ளாட்சி தேர்தல் புறக்கணிப்பு போன்று பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் இதுநாள் வரை இந்த பிரச்சனையை வருவாய்த்துறை செய்து கொடுக்கவில்லை மேலும் முள் கம்பி வேலி அமைத்த ஸ்ரீராமுலு கல்குவாரி பள்ளம் தோண்டி வழியில்லாமல் செய்த இருவர் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்யவில்லை என்பதை வலியுறுத்தி இந்திய குடியரசு கட்சி மாவட்ட தலைவர் இராசி .தலித் குமார் தலைமையில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபாலட்சுமி அவா்கள் இடம் மணு அளிக்கபட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment