பெரியமலையில் 45ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday 30 July 2024

பெரியமலையில் 45ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா!

வேலூர்ஜூலை 30 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சியில லிங்குன்றம் கிராமத்தில் பெரிய மலை ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ திருமுருகன் கோவிலில் 45ஆம் ஆண்டு ஆடி கிருத்திகை திருவிழா வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர் பேட்டை ஊராட்சி லிங்குன்றம் கிராமத்தில் பெரிய மலை ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ திருமுருகன் கோவில் நிர்வாகிகள் நாட்டாமை ராகவன். ஊர்பொருத்தனாம்  பலராமன். தர்மகர்த்தா ஜலேந்திரன். மேட்டுக்குடி சத்தியராஜ். தலைமையில் ஆடி கிருத்திகை திருவிழா நடைபெற்றது.

 விழாவில் ஒன்றிய குழு உறுப்பினர் சரஸ்வதி பிச்சாண்டி. ஊராட்சி தலைவர் வள்ளிநாயகி ஜடையப்பன். மற்றும் எஸ்.இராஜேந்திரன். மை.சண்முகம். சந்திரன். கோவிந்தாபுரம் இராஜேந்திரன். தண்டபாணி. எம்.பாபு. விழாவை சிறப்பு ஏற்படு செய்துள்ளார் ஆடி கிருத்திகை திருவிழாவில் ஸ்ரீ வள்ளி தெய்வானை ஸ்ரீ முருகப்பெருமானுக்கு சந்தன காப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் இதனைத் தொடர்ந்து பக்தர்கள் விரதம் இருந்து முருகப்பெருமானை வேண்டிக்கொண்டு நேர்த்திக்கடனாக காவடிகள் சுமந்து அரோகரா அரோகரா கோஷமிட்டு முருகப்பெருமானை வணங்கி வந்தனர் தரிசனத்திற்காக வரும் பக்தர்களுக்கு காலை முதல் இரவு வரை அன்னதானம் வழங்கப்பட்டது இவ்விழாவில் சுமார் ஆயிரத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை வணங்கி வந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad