பல்வேறு திருட்டு வழிப்பறியில் ஈடுபட்ட வந்த இளைஞர்கள் கைது அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ,பட்டாகத்தி, ரூ.500 பறிமுதல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 July 2024

பல்வேறு திருட்டு வழிப்பறியில் ஈடுபட்ட வந்த இளைஞர்கள் கைது அவர்களிடமிருந்து மோட்டார் சைக்கிள் ,பட்டாகத்தி, ரூ.500 பறிமுதல்!

காட்பாடி ஜூலை 26-

வேலூர் மாவட்டம், காட்பாடி அக்ராவரம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சண்முகம். இவரது மகன் குமார் (வயது 50). இவர் காட்பாடி வள்ளிமலை ரோட்டில் உள்ள நாட்டு மருந்து கடைக்கு கே.ஆர்.எஸ்.நகர் வழியாகச் செல்லும்போது இரண்டு நபர்கள் அவரை வழிமறித்து கத்தியை காண்பித்து மிரட்டி ஆபாச வார்த்தைகளால் திட்டி பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். அவர் பணத்தை கொடுக்க மறுக்கவே, ஆத்திரமடைந்த இருவரும் கத்தியால் அவரது கையில் குத்த முயன்றுள்ளனர் . அவர் சுதாரித்து கொண்டு கூச்சலிட்டுள்ளார்.
 
இந்நிலையில் கண்ணிமைக்கும் நேரத்தில் அவரது பாக்கெட்டில் இருந்த ரூ.2000/- ஐ பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர். உடனே குமார் நடந்த சம்பவம் குறித்து காட்பாடி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரை பெற்றுக்கொண்ட காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழிப்பறியில் ஈடுபட்டு வந்த இருவரை தீவிரமாக தேடி வந்தார். இந்தநிலையில் (24:07:2024) அன்று பிற்பகல் 2:30 மணியளவில் காட்பாடி வள்ளிமலை ரோட்டில் சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தார். அவர்கள் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் காவல் நிலையத்துக்கு  விசாரணைக்காக அழைத்து சென்றனர். 
அவர்களிடம் காவல் துணை கண்காணிப்பாளர் சரவணன், வட்ட காவல் ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் விசாரணை நடத்தினர். விசாரணையில் காட்பாடி பள்ளிக்குப்பம் பஜனை கோயில் தெருவைச் சேர்ந்த ஆனந்தன் மகன் மணிகண்டன் (வயது 29), காட்பாடி கரிகிரி மேல்பட்டி தெருவைச் சேர்ந்த சேகர் மகன் மணிகண்டன் (வயது 23) என்பதும் தெரியவந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து அக்ராவரம் பகுதியைச் சேர்ந்த குமார் என்பவரிடம் கத்தியை காட்டி ரூ.2000/- ஐ பறித்துச் சென்றதை ஒப்புக்கொண்டனர்.  இதையடுத்து அவர்கள் இருவர் மீதும் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் மணிகண்டன் வழக்குப் பதிவு செய்து நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினார். நீதிபதி உத்தரவின் பேரில் இருவரும் வேலூர் மத்திய சிறையில் காவலில் அடைக்கப்பட்டனர். அவர்களிடம் இருந்து வழிப்பறிக்கு பயன்படுத்திய  இருசக்கர வாகனம், கத்தி, ரூ.500 ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad