மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடிய தமிழக முதலமைச்சர் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 27 July 2024

மக்களுடன் முதல்வர் திட்டம் முகாமில் காணொளி காட்சி மூலமாக கலந்துரையாடிய தமிழக முதலமைச்சர்

குடியாத்தம் ஜூலை 28 

வேலூர் மாவட்டம் குடியாத்தம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட நெல்லூர் பேட்டை கிராமத்தில்எர்த்தாங்கல், நெல்லூர்பேட்டை ராஜகுப்பம்
செட்டிகுப்பம், போஜனாபுரம் ஆகிய 5 ஊராட்சிகளை சார்ந்த பொது மக்களுக்கான மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நேற்று குடியாத்தம் நெல்லூர் பேட்டை ஜே. எஸ். மஹாலில்
நடைபெற்றது.

இம்முகாமில் கோரிக்கைகளை மனுவாக பதிவு செய்ய வந்திருந்த பொதுமக்களிடம் தமிழ் நாடு முதலமைச்சர் அவர்கள் காணொலி காட்சி வாயிலாக கலந்துரையாடி இம்முகாமின் பயன்கள் குறித்து அவர்களிடம் நேரடியாக கேட்டறிந்தார்.
அதன்படி இம்முகாமில் கலந்து கொண்ட நெல்லூர் பேட்டை கிராமத்தை சேர்ந்த பயனாளி சிகாமணி (வயது 74 ) என்பவரிடம் இம்முகாமிற்கு எந்த கோரிக்கைக்காக வந்திருக்கிறார் என்றும் முகாமில் உரிய முறையில் மனு பதிவேற்றம் செய்யப்பட்டு தீர்வு காணப்பட்டதா எனவும் தங்களுக்கு பயனுள்ளதாக உள்ளதா எனவும் கேட்டறிந்தார். 
பயனாளி சிகாமணி அவர்கள் தனக்கு 74 வயது என்றும் பட்டா மாறுதல் வேண்டி மனு அளிக்க இந்த முகாமிற்கு வந்திருப்பதாகவும், காலை மனு கொடுத்தவுடன் உடனடியாக கணினியில் பதிவேற்றம் செய்து பட்டா மாறுதல் ஆணையும்
வழங்கப்பட்டுள்ளது.
 என முதல்வர் அவர்களிடம் தெரிவித்தார். இந்த முகாமின் மூலம் உடனடியாக பயன் கிடைத்ததாகவும் வயதான காலத்தில் வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு சென்று மனு அளித்து பட்டா வாங்குவது என்பது சிரமமான காரியம் ஆனால் எங்கள் ஊரிலேயே இந்த முகாம் நடைபெற்றதால் மிகவும் எளிதாக விண்ணப்பிக்கவும் முடிந்தது. உடனடியாக பட்டா பெற்று தீர்வு பெற்றுள்ளேன் என தெரிவித்தார்.
தொடர்ந்து மூளை முடக்குவாதம் நோயினால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளி பிரசன்னா தாயார் ஹேமமாலினி அவர்களிடம் முதலமைச்சர் தங்களின் கோரிக்கை என்னவென்று கேட்டறிந்தார். அப்பொழுது அவர் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ள தனது பிள்ளைக்கு சக்கர நாற்காலி வேண்டி விண்ணப்பித்ததாகவும் மனு உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டு இன்று சக்கர நாற்காலி வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர். சாதாரணமாக இது போன்ற கோரிக்கைகளுக்கு வேலூரில் உள்ள மாற்றுத்திறனாளி அலுவலகத்தை அணுக வேண்டும் நடக்க முடியாத என்னுடைய பிள்ளையை வேலூர் வரை அழைத்து சென்று இந்த சக்கர நாற்காலி பெறுவதற்கு மிகவும் சிரமப்பட வேண்டி இருந்த நிலையில் எங்களுடைய ஊரிலேயே இந்த முகாம் நடைபெற்றது மனு கொடுத்து உடனடியாக சக்கர நாற்காலியும் வழங்கப்பட்டுள்ளது. இந்த முகாமை கொண்டு வந்த  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தெரிவித்தார்.
தொடர்ந்து  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் மாவட்டத்தில் இதுவரை பெறப்பட்டுள்ள மொத்த மனுக்களின் எண்ணிக்கை, அதில் தீர்வு செய்யப்பட்டுள்ள மனுக்களின் எண்ணிக்கை,   முகாம்களில் பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், குடிநீர் போன்ற வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதா எனவும் முகாமில் வழங்கப்படும் மனுக்களை பதிவேற்றம் செய்வதற்கான கணினி இணைய வசதி ஆகியவை எவ்வாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது போன்ற பல்வேறு விளக்கங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களிடம் கேட்டறிந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) ராஜ்குமார்,  கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர்  திருகுண ஐயப்பதுரை,  சமூக பாதுகாப்பு திட்டம் (தனித்துணை ஆட்சியர்) கலியமூர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் இராமசந்திரன், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் சாந்தி பிரியதர்ஷனி, உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உமா, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் சரவணன், குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர்  சுபலட்சுமி, குடியாத்தம் வட்டாட்சியர்  சித்ராதேவி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள்  நந்தகுமார், வினோத்குமார் நெல்லூர் பேட்டை ஊராட்சி தலைவர் வள்ளிநாயகி செட்டிகுப்பம் ஊராட்சி தலைவர் இந்திரா ரவிச்சந்திரன் எர்த்தாங்கள் ஊராட்சி தலைவர் அம்மு நெடுஞ்செழியன் ராஜாக்குப்பம் ஊராட்சி தலைவர் மம்தா இமையகிரி பாபு போஜனாபுரம் ஊராட்சி தலைவர் தனலட்சுமி ராஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad