நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி திராவிடர் மாணவர் கழகம் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Saturday 13 July 2024

நீட் தேர்வை ரத்து செய்ய ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி திராவிடர் மாணவர் கழகம் தமிழ்நாடு தழுவிய அளவில் மாபெரும் இருசக்கர வாகன பரப்புரை பயணம்!

குடியாத்தம்  ஜூலை 13

வேலூர் மாவட்டம் குடியாத்தம் பழைய பஸ் நிலையத்தில் இன்று பிற்பகல் திராவிடர் இளைஞர் அணி மற்றும் மாணவர் அணி கழகத்தின் சார்பாக இருசக்கர வாகன பரப்புரை இன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட திராவிட மாணவர் அணி கழக தலைவர்  
இரா க இனியன் தலைமை தாங்கினார். குடியாத்தம் நகரத் தலைவர் சி சாந்தகுமார் வரவேற்பு உரையாற்றினார்

பரப்புரையாளர்கள்
மாவட்டத் தலைவர் திராவிட கழகம் வி  இ சிவகுமார் மாநில அமைப்பாளர் பகுத்தறிவாளர் கழகம்  இர அன்பரசன்
மாவட்ட காப்பாளர் திராவிடர் கழகம்
மாவட்ட காப்பாளர்  தி க கட்சி ஈஸ்வரி ஆகியோர் பரப்புரையாற்றினார்கள்

இந்நிகழ்ச்சிக்கு சென்னையிலிருந்து திராவிட கழகத்தினர் சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் இருசக்கர வாகனத்தில்  தி க கொடி ஏந்தி பேரணியாக வந்தனர்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 



No comments:

Post a Comment

Post Top Ad