காட்பாடி ஜுலை 14
வேலூர் மாவட்டம்
காட்பாடி அடுத்த அரிமுத்து மோட்டார் அம்முண்டி ஆகிய பகுதிகளில் வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த அம்முண்டி எம். டி குமரன் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் ஊரகப்பகுதிகளில் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் வருகின்ற 15. 7. 2024 அன்று விரிவாக்கம் செய்யப்பட உள்ளதை தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி இன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து வேலூர் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி காட்பாடி ஊராட்சி ஒன்றியம் ஆதிமுத்து மோட்டூர் ஊராட்சியில் இன்று கலைஞரின் கனவு இல்லை திட்ட பயனாளிகளின் இருப்பிடங்களுக்கு நேரடியாகசென்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது காட்பாடி வட்டாட்சியர் ஜெகதீஸ்வரன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சரவணன் ஹேமலதா உட்பட பலர் உடன் இருந்தனர்.
காட்பாடி தாலுகா செய்தியாளர் கே எஸ் அருண்
No comments:
Post a Comment