குடியாத்தம் ஜூலை 26
வேலூர் மாவட்டம் குடியாத்தம் மாவட்ட தொழுநோய் ஒழிப்பு திட்டம் லயன்ஸ் கிளப் கரிகிரிமருத்தவமனை சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் இன்று(25.7.2024) குடியாத்தம் கரிகிரி மருத்துவமனையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தொழுநோய் ஒழிப்பு திட்ட இயக்குனர் மருத்துவர் ப்ரீத்தா தலைமை தாங்கினார். குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையின் முதன்மை மருத்துவர் மாறன் பாபு முன்னிலை வகித்தார். நகர்புற மருத்துவ அலுவலர் பிரியதர்ஷினி மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சிறப்பு அழைப்பாளர்களாக குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் சார்பில் மாவட்ட தொழுநோய் ஒழிப்பு திட்டம் ஏற்பாடு செய்திருந்த நல திட்ட உதவிகளை லயன்ஸ் மாவட்ட தலைவர் எம்கே. பொன்னம்பலம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கத்தின் தலைவர் ஜே. பாபு மற்றும் லயன்ஸ் சஙக நிர்வாகிகள் ஜேஜிநாயுடு என். குமார் எஸ்வி. சுரேஷ்குமார் பிரவீன் குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு வழங்கினார்கள் .
மாவட்ட நலகல்வியாளர் லட்சுமிநாராயணன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார் முகாமில் கலந்து கொண்ட 90 க்கும மேற்பட்ட நோயாளிகளுக்கு மருத்துவ சுய உதவி நிவாரண பெட்டிகளும் பிரத்தியோகமாக வடிவமைக்கப்பட்ட காலணிகள் ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரனங்கள் வழங்கப்பட்டன.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment