தந்தை மகனுக்கு இடையே தகராறு தடுக்க வந்த தாய்க்கு கத்தி மகனுக்கு அரிவாள் வெட்டு மூவரும் மருத்துவமனையில் அனுமதி - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday 26 July 2024

தந்தை மகனுக்கு இடையே தகராறு தடுக்க வந்த தாய்க்கு கத்தி மகனுக்கு அரிவாள் வெட்டு மூவரும் மருத்துவமனையில் அனுமதி

குடியாத்தம் ஜூலை 26

வேலூர் மாவட்டம் குடியாத்தம்
 செட்டிகுப்பம் பகுதியை சேர்ந்தவர்   அன்புமணி இவா் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்று தற்போது விவசாயம் செய்து வருகிறார். இவரது மனைவி ராஜலஷ்மி (வயது63) இவருக்கு வினோத்குமார் என்ற மகனும் அபிராமி என்ற மகளும் உள்ளனர் இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது இந்நிலையில் அன்புமணியும் அவரது மனைவி ராஜலட்சுமியும் நிலத்தில் உள்ள வீட்டில் தனியாக வசித்து வருகின்றனர். வினோத் குமாரும் இவரது மனைவி பிரியங்காவும் அருகே மற்றொரு வீட்டில் தனித்தனியாக வசித்து வருகின்றனர். இந்நிலையில் அன்புமணிக்கும் வினோத்குமாருக்கும் அடிக்கடி குடும்ப பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு அன்புமணிக்கும் அவரது மகன் வினோத்குமாருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டு இருவருக்கும் பிரச்சினை எழுந்துள்ளது இதில் ஆத்திரம் அடைந்த வினோத்குமார் தந்தை அன்புமணியை அடித்து கீழே தள்ளி உள்ளார் இதனால் ஆத்திரமடைந்த அன்புமணி அருகே இருந்த கத்தி எடுத்து வினோத்குமாரை தாக்கியுள்ளார். அப்போது தடுக்க வந்த அவரது மனைவி ராஜலட்சுமிக்கு வயிற்றில் கத்தி பட்டு கிழித்தது இதில் அலரி துடித்து கீழே விழுந்தார் மேலும் ஆத்திரம் தாங்காமல் அன்புமணி மகனை கத்தியால் தாக்கியுள்ளார் அதில் அவரது  வயிற்றுப் பகுதிகளில் காயம் ஏற்பட்டது. இதே போல் வினோத்குமார் தாக்கியதில் அன்புமணிக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது இவர்களின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் வந்து மூவரையும் மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதில் வினோத் குமார் அவரது தாய் ராஜலட்சுமி ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக அடுக்கும்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் .
அன்புமணி குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதுகுறித்து தகவல் அறிந்தால் தாலுகா போலீசார் சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர். தந்தை மகனுக்கு இடையே நடந்த சண்டையில் விளக்குச் சென்ற தாய்க்கு கத்திக்குத்தி ஏற்பட்டது அப்பகுதியில் பரவும் பரப்பரப்பை ஏற்படுத்தியது.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad