குடியாத்தம் ஜூலை 8
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்தராஜா கோவில்
கிருஷ்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் ஐயப்பன் (வயது 40) டெய்லர் இவர் கடந் ஞாயிற்றுக்கிழமை அன்று தனது மனைவியுடன் சின்ன நாகிலுள்ள விவசாய நிலத்துக்கு விவசாய பணி செய்ய சென்றுள்ளார் அப்போது வீட்டின் வெளிப்பக்க கதவை பூட்டி சென்றுள்ளனர். வேலை முடிந்து வீட்டுக்கு திரும்பியுள்ளனர். அப்போது கேட்டின் பூட்டை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறி கிடந்தது பார்த்து அதிர்ச்சடைந்தனர்.
மேலும் பீரோவில் வைத்திருந்த மூன்று சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபாய் திருடி சென்றதும் தெரிய வந்தது. இதுகுறித்து டவுன் போலீசில் ஐயப்பன் புகார் செய்தார் அதன் பேரில் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment