குடியாத்தம் ஜூலை 8
தமிழ்நாடு அரசு அனைத்துத்தறை ஓய்வூதியர் சங்க குடியாத்தம் வட்டக்கிளையின் 8 ஆவது பேரவைக்கூட்டம் குடியாத்தம் ஸ்ரீ மீனாட்சி திருமண மண்டபத்தில் நடைபெற்றது. வட்டகிளை சங்க தலைவர் சரவணன் தலைமை தாங்கினார்.
செயலர் கோட்டீஸ்வரன் அறிக்கை வாசித்தார். சங்க துணைத்தலைவர் அனைவரையும் வரவேற்றார். உயிர்நீத்த உறுப்பினர்களுக்கு ரமாநந்தினி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். சங்கத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான அறிக்கையை எம்.ஆர்.மணி வாசித்தார். சங்க பொருளாளர் தனபால் வரவு, செலவு அறிக்கை வாசித்தார். மாநில பொதுச்செயலாளர் பி.கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். வழக்கறிஞர் சம்பத்குமார், மாவட்ட செயலாளர் ரவி, மாவட்ட பொருளாளர் ஞானசேகரன், அஞ்சல்துறை எழில்மாறன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியத்தை ரூ 7850/- ஆக மாற்ற வேண்டும், 70 வயது அடைந்தவர்களுக்கு 10% கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் சங்க இணை செயலாளர் திருநாவுக்கரசு நன்றியுரை ஆற்றினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment