வேலூர் ஜுலை 9
வேலூர் மாவட்டம், வேலூர் தாலுகா, ஓட்டேரி அருகே, வேலூர் முத்துரங்கம் அரசு கலைக் கல்லூரியில் கௌரவ விரிவுரையாளர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, உடனடியாக நிறைவேற்ற கோரி கோஷமிட்டு பதாகைகளை கையில் ஏந்தி, கல்லூரி எதிரில் வாயில் முழக்க போராட்டம் நடைபெற்றது.
இந்தப் போராட்டத்தில் 17 ஆண்டுகள் முதல் சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் தொகுப்பு ஊதிய கௌரவ விரிவுரையாளர்களின் ஐந்து அம்ச கோரிக்கைகள்.
1). 17 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பு ஊதியத்தின் அடிப்படையில் பணி புரிபவர்களுக்கு உடனடியாக பணி நிரந்தரம் செய்திடவும்,
2). உயர் நீதிமன்ற மதுரை கிளை 28-01-2019ன் தீர்ப்பின்படி 56 யுஜிசி (UGC) வரையறுத்த மாத ஊதியம் ரூ.57700/- மாத ஊதியமாக உடனடியாக வழங்கிடவும், உயர் நீதிமன்ற F 25-1/2018 (PS/MISC) 28-01-2019 Arrear Monthly 50,000/-, நிலுவைத் தொகை Rs. 17,00,00/- ஒவ்வொரு கௌரவ விரிவுரையாளர்களுக்கும் நிலுவைத் தொகை 17லட்சத்தை உடனே வழங்கிட வேண்டியும்,
3). கௌரவ விரிவுரையாளர்களுக்கு (பெண்களுக்கு) அரசு சலுகைகளுடன் மகப்பேறு பேறுகால விடுப்பு வழங்கிடவும், (Mertinity leave) விடுமுறைகளை உடனடியாக நடைமுறைப்படுத்தி விடுப்புகளை வழங்கிட வேண்டியும்,
4). 2024 TRB கல்லூரி உதவி பேராசிரியர் எழுத்து தேர்வை உடனடியாக ரத்து செய்திடவும்
5). கௌரவ விரிவுரையாளர் மாற்றுத்திறனாளிகளுக்கு 4%, நான்கு சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கிட வேண்டி ஐந்துக்கும் மேற்பட்ட பல்வேறு கோரிக்கைகளை உயர்நீதிமன்ற மதுரைகிளை தீர்ப்பின்படி எங்களின் உழைப்பின் நிலைமையை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென சுமார் 80க்கும் மேற்பட்டோர் இப்போராட்டத்தில் கலந்துகொண்டு பதாகைகளை கையில் ஏந்தி கோரிக்கைகளை நிறைவேற்ற கோஷமிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment