குடியாத்தம், ஜூலை 11
வேலூர் மாவட்டம்
குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி தலைமையில் நில உடமை மேம்பாட்டு திட்டம் சார்பில் பரப்பு திருத்தம் மற்றும் பெயர் திருத்த சிறப்பு முகாம் நடைபெற்றது.
இதில் திருத்தம் செய்வதற்காக விண்ணப்பித்திருந்த மனுதாரர்களை நேரில் அழைத்து ஆவணங்களை சரி பார்த்தார். குடியாத்தம் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் இருந்து 50க்கும் மேற்பட்ட மனுதாரர்கள் கலந்து கொண்டனர்.
தாசில்தார் சித்ராதேவி, மண்டல துணைதாசில்தார் சுபிச்சந்திரன், வருவாய் ஆய்வாளர்கள் பலராம பாஸ்கர், புகழரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள், சர்வேயர்கள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment