குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா சார்பில் இயற்கை முறையில் வலி நிவாரண சிறப்பு முகாம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Sunday, 18 August 2024

குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி இயற்கை மற்றும் யோகா சார்பில் இயற்கை முறையில் வலி நிவாரண சிறப்பு முகாம்

குடியாத்தம் ஆக 18

வேலூர் மாவட்டம் குடியாத்தம் காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி
 மருத்துவமனையின் சார்பாக இயற்கை முறையில் வலி நிவாரண சிகிச்சை சிறப்பு முகாம் பள்ளிகொண்டா 281/3, NH-46 அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் கட்டிடத்தில் நடைபெற்றது. 

அத்தி மருத்துவமனையின் கிளை தலைமை மருத்துவர் டாக்டர் ஆ கென்னடி தலைமை தாங்கினார்.  இதில் சிறப்பு  விருந்தினராக டாக்டர் திரு s s யுவராஜ் MBBS.MD அவர்களின் தந்தையும்  அண்ணா வெல்டிங் ஒர்க்ஸ் உரிமையாளருமான  s சகாதேவன் அவர்கள் கலந்துக்கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.  இயற்கை மற்றும் யோகா மருத்துவ கல்லூரியின் முதல்வர் டாக்டர் k தங்கராஜ் அவர்கள் கலந்துக்கொண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினார். மேலும் அத்தி மருத்துவமனையின் மருத்துவர்கள் சதிஷ், கலையரசி, ஸ்ரீவைஷ்ணவி, நந்தகுமார் ஆகியோர் அக்குபக்சர் ,அக்குபிரஷர்,யோகா மற்றும் உணவு கட்டுப்பாடு முறை மூலம் சிகிச்சை அளித்தனர். குடியாத்தம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் k குமரவேல் அவர்கள், நிர்வாக அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் உடன் இருந்தனர். முகாமில் சுமார் 100 நோயாளிகள் பயனடைந்தனர்.


குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன் 

No comments:

Post a Comment

Post Top Ad