பார்வையற்ற மாற்றத்திறனாளிகள் வேதனை பேருந்து ஓட்டுனர், நடத்துனர் சஸ்பெண்ட்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday, 19 August 2024

பார்வையற்ற மாற்றத்திறனாளிகள் வேதனை பேருந்து ஓட்டுனர், நடத்துனர் சஸ்பெண்ட்!

வேலூர் ஆக19

வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா அடுத்த திப்பசமுத்திரம் பகுதியை சேர்ந்த தம்பதியர் ராமதாஸ் மற்றும் விசாலாட்சி. இவர்கள் வேலூரில் இருந்து பள்ளிகொண்டா வரை நேற்று அரசு பேருந்தில் பயணம் செய்தனர். பள்ளிகொண்டா பகுதியில் கண் பார்வையற்ற தம்பதியர் இறங்குவதற்குள் பேருந்தை ஓட்டுநர் செந்தில் இயக்கியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ராமதாஸ், விசாலாட்சி தவறி கீழே விழுந்தனர்.

அவர்களை பொதுமக்கள் மீட்ட நிலையில், தம்பதியரிடம் ஓட்டுநர் மற்றும் நடத்துனர் அவதூறாக பேசி உள்ளனர். மேலும் தினமும் இதே பேருந்தில் எதற்காக வருகிறீர்கள் என்று நடத்துனர் பிரபு கேட்டதாகவும், எங்களை மரியாதை குறைவாக நடத்துவதாகவும் மாற்றத்திறனாளிகள் வேதனை தெரிவித்தனர்.

இந்த நிலையில் ஓட்டுநர் செந்தில் மற்றும் நடத்துனர் பிரபு ஆகிய இருவரையும் பணியிடை நீக்கம் செய்து தமிழக அரசு போக்குவரத்து கழக வேலூர் பொது மேலாளர் கணபதி உத்தரவிட்டுள்ளார்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad