தமிழ்நாடுவிஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்கம் சார்பில் வேலூரில் 24 ஆவது ஆண்டாக ஆவணி அவிட்டம் பூணல் மாற்றும் விழா - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Monday 19 August 2024

தமிழ்நாடுவிஸ்வகர்ம நண்பர்கள் நலச் சங்கம் சார்பில் வேலூரில் 24 ஆவது ஆண்டாக ஆவணி அவிட்டம் பூணல் மாற்றும் விழா

வேலூர் ஆக19

வேலூர் மாவட்டம் தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள் நல சங்கம் சார்பில் வேலூரில் 24 ஆவது ஆண்டாக ஆவணி அவிட்டம் விழா மற்றும் பூணல் மாற்றும் விழா நடைபெற்றது. 

                  ஆவணி மாதம் பௌர்ணமி அவிட்டம் நட்சத்திர தினத்தன்று பூணல் அணிபவர்கள் அனைவராலும் சிறப்பாககொண்டாடப்படும் ஒரு பக்திபூர்வமான பண்டிகை இது.  இந்த நாளில் பூணல் அணிபவர்கள் தங்கள் அணிந்துள்ள பழைய பூணல் மாற்றும் விதமாக புதிய பூணூல் காயத்திரி மந்திரம் உச்சரித்து அணிந்து கொண்டு பின் பழைய பூணூலை கழற்றிவிடுவர்.
இப்படிப்பட்ட இவ்விழா ஆவணி அவிட்டம் விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.  இந்த ஆண்டு தமிழ்நாடு விஸ்வகர்ம நண்பர்கள்நலச்சங்கம் சார்பில் வேலூர் மாநகரம், பேரிப்பேட்டை, காந்திரோடு அடுத்த கே.வி.எஸ்செட்டித்தெருவில் அமைந்துள்ள வீரபிரம்மங்கார் மடத்தில் 24ஆவது ஆண்டாக ஆவணி அவிட்டம் என்னும் பூணல் மாற்றும் விழா 19.08.2024காலை 10 மணியளவில் நடைபெற்றது.
      விழாவிற்கு தலைவர் சி.தோஜோமூர்த்தி தலைமை தாங்கினார்.   நிறுவனர் மற்றும் செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார்.  ஒருங்கிணைப்பாளர் ஞான.நடராசன்,  துணைத்தலைவர்கள் எல்.பன்னீர்செல்வம். எம்.எஸ்.அண்ணாமலை எம்.ஞானசம்ந்தன்   ஆகியோர்  முன்னிலை வகிக்கித்தனர்.  ஆலயத்தின் அர்ச்சகர் ஜெ.குப்புசாமி ஆச்சாரி மற்றும் கே.குப்பன் ஆச்சாரி ஆகியோர் வேத மந்திரங்கள் ஓதி பூணல் மாற்றும் நிகழ்வினை நடத்தினார்.
விஸ்வமலர் குழு தலைவர் எம்.அன்பரசு, துணைச்செயலாளர் கோ.சுவாமிநாதன், இணை செயலாளர் எம்.செல்வராஜ், செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.ஜெகதீசன்,  ஜெ.ஜெயபிரகாஷ், கோ.கார்த்திகேயன், எம்.சீனிவாசன், எஸ்.தீனதயாளன், தட்சிணாமூர்த்தி, தியாகராஜன், சுப்பிரமணி, துரைசாமி, சந்திரசேகர், தாமரைசெல்வன், டி.விஷால்,  மனோகரன் சிவப்பிரகாசம்,  மணி என்.சுந்தரமூர்த்தி, கமலக்கண்ணன்   ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.
கணபதிஹோமம் செய்த பின்னர் பூர்லோகம், புவர்லோகம், ஸ்வரலோகம் ஆகிய மூன்று லோகங்களையும் படைக்க காரணமான ஒளி பொருந்தியவரை நாங்கள் தியானிக்கின்றோம். அந்த பரம்பொருள், நாங்கள் மேலான உண்மையை உணரும் அறிவை ஊக்குவிக்கட்டும். என்ற காயத்திரி மந்திரம் உச்சரித்து பூணல் மாற்றிக் கொண்டனர்.
ஆவணி அவிட்டம் அன்று கல்வி தொடங்குவதற்கான 'உபாகர்மா' என சொல்லப்படுகிறது. சந்திரனை அடிப்படையாக கொண்ட ஸ்ராவண மாதத்தில் வரக்கூடிய பெளர்ணமி தினத்தில் ஆவணி அவிட்டம் கொண்டாடப்படுகிறது. சந்திரனை அடிப்படையாக கொண்டு குறிப்பிடப்படும் மாதம். அதாவது ஆடி அமாவாசை முதல் ஆவணி அமாவாசை வரையிலான காலம் ஸ்ராவண மாதமாகும். இந்த மாதத்தில் வரக்கூடிய அவிட்ட நட்சத்திர நாளில் அல்லது பெளர்ணமி திதியில் ஓர் ஆண்டுக்கான கல்வி தொடங்குகிறது.
 இந்த நிகழ்வில் வேலூர் மாநகரத்தில் உள்ள விஸ்வகர்ம நண்பர்கள் சுமார் இரு நூறு பேர் பங்கேற்று பூணல் மாற்றிக் கொண்டனர். காலை 9 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை நிகழ்வு நடை பெற்றது.
 
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad