சாலை வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொந்தளிக்கும் மக்கள் புரட்சிக் கழகம் - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 10 September 2024

சாலை வியாபாரிகளின் வயிற்றில் அடிக்கும் வேலூர் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கொந்தளிக்கும் மக்கள் புரட்சிக் கழகம்

வேலூர் செப்.10-

வேலூர் மாவட்டம் காட்பாடி ஓடை
 பிள்ளையார் கோவில் சர்வீஸ் ரோட்டில் உள்ள சாலை வியாபாரிகளின் கடைகளை அகற்றியது வேலூர் மாநகராட்சி . இதனால் இன்று அவர்களின் வியாபாரம் பாதிக்கப்பட்டது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு மேலாக நாங்கள் எந்த விதமான தொந்தரவும் இன்றி வியாபாரம் செய்வதாகவும், தீடிரென்று மாநாகராட்சி நிர்வாகம் கடைகளை எடுக்க கூறுவதாகவும், மேலும்  சாப்பாட்டில் பினாயில் ஊற்றி விடுவதாக கூறியதாகவும் கடை வியாபாரிகள் கூறுகின்றனர்.  இவ்வாறு கூறியது வியாபாரிகள் மத்தியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.சுமார் நூறு குடும்பங்கள் இங்குள்ள கடைகளினால் பிழைப்பு நடத்தி வருகின்றனர். இங்குள்ள கடைகளை அகற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். இது குறித்து உதவி ஆணையரிடம் தொடர்பு கொண்ட போது எனக்கும் இதற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை என்று கூறுகின்றார். மாநகராட்சி நிர்வாகம் கடைகளுக்கு வரி போட்டு கொடுத்து ஏழைகள் வயிற்றில் பால் வார்க்க வேண்டும் என்று மக்கள் புரட்சிக் கழகம் சார்பாக மாவட்ட செயலாளர் அன்பரசன் தெரிவித்தார் 

வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad