மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு இணைந்து அகில இந்திய கோரிக்கை ஆர்ப்பாட்டம்.
வேலூர் செப்.26-
வேலூர் மாவட்டம்
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் இணைந்து அகில இந்திய கோரிக்கை ஆர்ப்பாட்டம் இன்று வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் டிடி ஜோஷி தலைமை தாங்கினார்
முன்னாள் மாவட்ட செயலாளர் அ .சேகர் துவக்க உரையாற்றினார்.
மாவட்ட செயலாளர் பா வேலு கோரிக்கை விளக்க உரையாற்றினார். இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முனைவர் செ.நா.ஜனார்தனன் நிறைவுறையாற்றினார்.
நிர்வாகிகள் தீனதயாளன், இளந்தமிழன், சுமதி, தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில துணைத்தலைவர் ஜெயப்ரகாஷ் கல்வி மாவட்ட தலைவர் திருமுருகன் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஜோசப் அன்னையா, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் செல்வகுமார் சத்துணவு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் வில்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்
அகில இந்திய அளவில் ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்த தேசிய செயற்குழு மற்றும் மாநில செயற்குழு முடிவின்படி 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோரிக்கைகள்:
1.தேசிய ஓய்வூதிய திட்டத்தின் கீழ் பி எஃப் ஆர் டி ஏ அமைப்பில் சட்டத்தை ரத்து செய்து அதில் டெபாசிட் செய்யப்பட்ட தொகையை மாநில அரசுகளுக்கு திருப்பித் தர கோரியும் அனைவருக்கும் பழைய ஓய்வூதிய திட்டம் நடைமுறைப்படுத்த கோரியும்
2.ஒப்பந்த ஊதியம் மதிப்பூதியம் தின கூலி முறை வெளிமுகைமை மூலம் நியமனம் உள்ளிட்ட அனைத்து முறைகளையும் ரத்து செய்து அனைவருக்கும் காலமுறை ஊதியம் வழங்கி பணி வரன்முறை படுத்த வேண்டுகின்றோம்.
3.பொதுத்துறை மற்றும் அரசு துறைகளில் அரசின் பங்கை குறைப்பதும் தனியார் மயப்படுத்துவதையும் உடனே நிறுத்த வேண்டும்
4.ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை கால முறை ஊதியம் திருத்துவதை உறுதி செய்ய வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட அகவிலைப்படி உயர்வினை நிலவுயின்றி வழங்க வேண்டும்
5.தேசிய கல்விக் கொள்கையை கைவிட வேண்டும்
6.அரசின் கண்காணிப்பில் விரிவான கட்டணமில்லா மருத்துவ காப்பீட்டு திட்டத்தை அனைத்து அரசு ஊழியர்கள் ஓய்வூதியர்கள் ஒப்பந்த தினக்கூலி ஊழியர்களுக்கும் உத்தரவாதப்படுத்த வேண்டும்
7.அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்ட புதிய மூன்று குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வேண்டும்.
8.அரசியலமைப்பில் பொதிந்துள்ள மதசார்பின்மையை நிலை நிறுத்தவும் அனைத்து வகையான வகுப்பு வாதங்களை எதிர்த்து போராட வேண்டும்
9.மத்திய மாநில அரசுகளின் உறவுகளை மறு வரையறை செய்திடவும் கூட்டுறவு கூட்டாட்சி தத்துவத்தை பாதுகாத்திட வேண்டும்
10.வருமான வரி உச்சவரம்பை 10 லட்சமாக உயர்த்திட வேண்டும்
உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய அளவில் இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைநகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முடிவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment