குடியாத்தம் செப்.27-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம் பெரும்பாடி கிராமத்தில் கல்பவிருக்ஷா அறக்கட்டளை மற்றும் கிராம நிர்வாகத்தின் சார்பாக தென்னை விவசாயிகள் கருத்தரங்கு நடைபெற்றது.
இதில் தென்னங்கன்று நடவு, மற்றும் வளர்ப்பு முறைகள், உரமிடுதல், நோய் தாக்குதலும் அதற்க்கான தீர்வுகளும், மேலும் தென்னையின் பொருளாதார முக்கியத்துவம் போன்ற தலைப்புகள் விவாதிக்கப்பட்டன.
இதில் தென்னை விவசாய நிபுணர், மற்றும் ஆலோசகர் டாகடர் பொள்ளாச்சி கண்ணன் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு தென்னையை பற்றிய முக்கிய தகவல்களை வழங்கினார். கல்பவிருஷாமேலாளர் கேசவன், மற்றும் தன்னார்வலர்கள் கமல்ராஜ், பைரோஸ், சேட்டு ஆகியோர் கருத்தரங்கில் கலந்து கொண்ட பெரும்பாடி கிராம விவசாயிகளுக்கு தரம் உயர்த்தப்பட்ட நாட்டுவகை தென்னங்கன்றுகளை இலவசமாக வழங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியில் ஊராட்சி நிர்வாகத்தின் சார்பாக செழியன் நன்றியுரை தெரிவித்தார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment