லயன்ஸ் கிளப் சார்பில் தேசிய காது கேளாதோர் வாரவிழா மற்றும் சைகை மொழி தினவிழா
குடியாத்தம் செப்.23-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர லயன்ஸ் சங்கம் மற்றும் அரசு தலைமை மருத்துவமனை இணைந்து தேசிய காது கேளாதோர் வார விழா மற்றும் சைகை மொழி தின விழா (23.9.2024) திங்கட்கிழமை அன்று காலை குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் மாறன் பாபு தலைமை தாங்கினார் டாக்டர் ஆக்னெஸ் பியூலா மற்றும் சைகை மொழி ஆசிரியர் வேல்முருகன் செவிலியர் சத்தியா லேப்டெக்னீசியன் மோகன்பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு சைகை மொழி மற்றும் காது கேளாதோர் விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துரைத்தனர் இதில் குடியாத்தம் நகர லயன்ஸ் கிளப் தலைவர் ஜே.பாபு முன்னாள் தலைவர் ஜேஜி. நாயுடு மண்டல தலைவர் டி கமலஹாசன் ஆகியோர்
சிறப்புரையாற்றினார்கள் நிகழ்ச்சியில் உறுப்பினர் ஆறுமுகம் மற்றும் பள்ளி பயிலும் காது கேளாத வாய் பேச முடியாத 40க்கும் மேற்ப்பட்ட மாணவர்கள் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர் இதில் காது கேளாத வாய் பேச முடியாத மாணவர்களுக்கு மாற்றுத்திறனாளி அடையாள அட்டை மற்றும் காது கேட்கும் கருவிகள் வழங்க அரசு மருத்துவமனை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment