குடியாத்தம் செ.23-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த காக்கா தோப்பில் அமைந்துள்ள அத்தி கல்லூரியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு சேவைகள் திட்டத்தின் குடியாத்தம் வட்டார குழந்தைகள் வளர்ச்சி துறை பணிகள் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் சமீம் ரிஹானா, தலைமை தாங்கினார். தலைமை மருத்துவ அதிகாரி கென்னடி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் பால்ராஜ் வரேற்றார். குடியாத்தம் தலைமை மருத்துவமனையின் மருத்துவ அலுவலர் மாறன் பாபு, கலந்து கொண்டு நிகழ்வினை தொடங்கி வைத்தார். பரிசுகள
நிகழ்வில் கல்லூரி மாணவிகள் செய்த இயற்கை உணவு மற்றும் சிறுதானியங்கள் கண்காட்சி வைக்கப்பட்டிருந்தது. தொடர்ந்து ஊட்டச்சத்து குறைபாடுகள் ஏற்படும் தீமைகள், குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக விழிப்புணர்வு பாடல் ஒலிப்பரப்பு செய்து மாணவிகள் அதற்கு ஏற்ற நடனம் ஆடினர். மேலும் தாய்ப்பால் கொடுப்பதின் அவசியம். தவிர்க்க வேண்டிய உணவுகள் மற்றும் உண்ண வேண்டிய உணவுகளை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. இதையடுத்து மாணவிகளுடன் ஊட்டச்சத்து தொடர்பாக கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மேலும் யோகா ஆசிரியர் தவச்செல்வி, இயற்கை ஆர்வலர் தினேஷ் சரவணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment