குடியாத்தம் செப்.20-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர் மாதாந்திர கூட்டம் நடைபெற்றது
கூட்டத்திற்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார் வேளாண்மை துறை உதவி இயக்குனர் உமா சங்கர் முன்னிலை வகித்தார்
வருவாய் கோட்டாட்சியர் நேர்முக உதவியாளர் நெடுமாறன் வரவேற்றார்
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார்
வனத்துறை அலுவலர் வினோபா
தேர்தல் பிரிவு அலுவலர் பூங்கோதை
தோட்டக்கலை அலுவலர் தமிழரசி
பேரணாம்பட்டு துணை வட்டாட்சியர் மஞ்சுநாதன் உள்ளிட்ட 13 துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்
விவசாய சங்கப் பிரதிநிதிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்
இதில் குடியாத்தம் செதுக்கரை விநாயகபுரம் பகுதியில் உள்ள பொது மக்களுக்கு கடந்த 2000 ஆண்டு முதலமைச்சர் மு கருணாநிதி அவர்கள் 32 குடும்பங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டாக்கள் வழங்கினார்
இதுவரை அந்தப் பட்டாக்கள் அரசு பதிவேட்டில் பதிவு செய்யப்படவில்லை இதை குறித்து அப்பகுதி பொதுமக்கள் போராட்டங்கள் காத்திருப்பு போராட்டங்கள் நடத்தினார்கள் அவர்களின் பட்டாக்களை ஒரு மாத காலத்தில் அரசு பதிவேட்டில் ஏற்றப்படும் என்று வட்டாட்சியர் உறுதியளித்துள்ளார் அதை நிறைவேற்ற வேண்டும்
குடியாத்தம் அரசு தலைமை மருத்துவமனையில் அவ்வப்போது வீண் கலாட்டாக்கள் வீண் பிரச்சனைகள் போதையில் பிரசவாடில் அத்துமீறி மருத்துவம் பார்க்கிறார்கள்
குடிபோதையில் வார்டுகளில் உள்ள பெட்டுகளில் படுத்து உறங்குகிறார்கள் இது போன்ற அசம்பாவிதங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது எனவே மருத்துவமனை வளாகத்தில் புறநகர் காவல் நிலைய அமைக்க வேண்டும்
வெள்ளேரி முதல் கொட்டாரமடுகு வரை சாலைகளை சீர் அமைக்க வேண்டும் கால்நடை சந்தை அமைக்க வேண்டும்
விவசாயிகள் பயிரிட்ட மணிலாபயிா்களால்
விளைச்சல் வரவில்லை இதற்கு நஷ்ட ஈடு தர வேண்டும் என்றறும்
கனவா மோட்டூர் பகுதியை சார்ந்த ஜெயராமன் என்கிற விவசாயி தான் பயிரிட்ட வேர்க்கடலை சரியாக விளைச்சல் வரவில்லை என்று வேர்க்கடலை செடியுடன் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தால்
இதில் விவசாய பிரதிநிதிகள் சாமிநாதன் பழனியப்பன் குணசேகரன் சேகர் ஆகியோர் பங்கேற்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment