வேலூர் செப்.23-
வேலூர் மாவட்டம் காங்கேயநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணி இடைநீக்கம் இரத்து செய்ய கோரி கருப்பு பட்டை அணிந்து பணிசெய்யும் போராட்டம் வேலூர் மாவட்டத்தில் 4500 ஆசிரியர்கள் பங்கேற்பு
மாவட்ட ஆட்சியர் அழைப்பின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு போராட்டம் வாபஸ் செய்யப்பட்டது.
வேலூர் மாவட்ட அனைத்து வகை ஆசிரியர் சங்கங்களில் கூட்டமைப்பின் இடைநிலை ஆசிரியர் முதல் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் வரை உள்ள 24 இயக்கங்களை சார்ந்த ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் 4500 ஆசிரிய ஆசிரியைகள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு செல்லும் போராட்டம் நடைபெற்றது. மாலை வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வி.ஆர்.சுப்புலட்சுமி அவர்களின் அழைப்பின் பேரில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு போராட்டம் வாபஸ்.
மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் செ.மணிமொழி, முன்னிலையில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் செ.நா.ஜனார்த்தனன், முகமது ஷாநவாஸ், ஆ.ஜோசப் அன்னையா அரசு ஊழியர் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் அ.சேகர், இணை ஒருங்கிணைப்பாளர்கள் ஆர் ஜெயக்குமார் ஜி.டி.பாபு எஸ்.எஸ்.சிவவடிவு, எம்.எஸ்.செல்வகுமார், கே.ஜெகதீசன், அக்ரி இ.ராமன், ஜி.சீனிவாசன், ஏ.வி.கவியரசன், கே.சங்கர், ஜி.கோபி, ஜெயகாந்தன், தலைமையாசிரியர்கள் எம்.சினேகலதா, பாஸ்கர், எஸ். ராஜேஷ்கண்ணா, ஆகியோருடன் பாதிக்கப்பட்ட ஆசிரியரும் பங்கேற்றார். அப்போது பேசியர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் இது குறித்து உரிய நடவடிக்கை உடன் மேற்கொள்வதாகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர் மீதான நடைவடிக்கை முற்றாக விரைவில் தீர்க்கப்படும் என்றும் எனவே தாங்கள் மேற்கொள்ள போராட்டத்தினை கைவிட வேண்டுமென கேட்டுக்கொண்டார். அவர்களின் உறுதிமொழியினை ஏற்று உடனடியாக போராட்டத்தினை விலக்கி கொண்டனர்.
முன்னதாக காங்கேயநல்லூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற மாணவிகள் செயலுக்காக ஆசிரியரைப் பணியிடை நீக்கம் செய்தது கண்டித்து அனைத்து வகை ஆசிரியர்கள் இன்று 23.09.2024 திங்கட்கிழமை முதல் வேலூர் மாவட்டத்தில் ஆரம்ப ப்பள்ளி முதல் மேல்நிலைப்பள்ளி வரை பணிபுரியும் அனைத்து ஆசிரியர்களும் கருப்புப் பட்டை அணிந்து பணிபுரிந்தனர். உள்ளிட்டோர் தலைமையில் மாவட்டத்தில் வேலூர், காட்பாடி, கணியம்பாடி, அணைக்கட்டு, பேர்ணாம்பட்டு, குடியாத்தம், கே.வி.குப்பம் ஒன்றியங்களில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 4500க்கும் மேற்பட்ட ஆசிரிய ஆசிரியைகள் கருப்பு பட்டை அணிந்து பணிக்கு சென்றனர்.
மேலும் இதுகுறித்து இன்று திங்கட்கிழமை மாலை 05.00 மணிக்கு முதன்மைக் கல்வி அலுவலரை சந்தித்து முறையிட சென்றனர் மேலும் அப்போது முதன்மைக்கல்வி அலுவலர் அலுவலகத்தில் இல்லாத காரணத்தினால் காத்திருப்போராட்டம் மற்றும் முற்றுகையிடும் போராட்டம் நடத்திட திட்டமிட்டனர். இதனிடையே மாவட்ட ஆட்சித்லைவர் வி.ஆர்.சுப்புலட்சுமி அவர்கள் அழைத்து பேச்சுவார்தை நடத்தியதுடன் கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கை உடன் மேற்கொள்வதாகவும் விரைவில் தீர்வு காணப்படும் என்றும் உறுதிமொழி அளித்தன் பேரில் சமாதனம் அடைந்த அனைத்து வகை ஆசிரியர்கள் கலைந்து சென்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment