தேசிய பேரிடர் மீட்பு பணி குழுவினரின் சார்பில் விழிப்புணர்வு மற்றும் செய்முறை பயிற்சி
குடியாத்தம் செப்.24-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் பகுதியில் அமைந்துள்ள தேசிய பேரிடர் மீட்பு பணி குழுவினரின் சார்பில் இயற்கை இடர்பாடுகளின் போது மேற்கொள்ள வேண்டிய செயல்முறைகள் குறித்து விழிப்புணர்வு செய்முறை பயிற்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு சப் கலெக்டர் சுபலட்சுமி தலைமை வகித்தார்.
தாசில்தார் மெர்லின் ஜோதிகா தலைமை யிடத்து துணை தாசில்தார் உதயகுமார் மண்டல துணை வட்டாட்சியர் சுபி சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தேசிய பேரிடர் மீட்புக்கு சப்-இன்ஸ்பெக்டர் வினித்குமார் வரவேற்றார். இதில் இயற்கை பேரிடர் மனிதனால் ஏற்படுத்தும் பேரிடர்களில் இருந்து பொதுமக்களை எவ்வாறு காப்பது என்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். மேலும் விஷ பூச்சிகள் தீண்டினால் மேற்கொண்டு செய்ய வேண்டிய வழிமுறைகளை குறித்தும் விரிவாக எடுத்தரைத்தனர். இதில் நகராட்சி ஆணையாளர் மங்கையர்க்கரசன் தலைமை மருத்துவமனை மருத்துவ அலுவலர் மாறன் பாபுபொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கோபி மற்றும் பல துறை சார்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment