சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமைக்கான காலவரையற்ற வேலை நிறுத்தம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 1 October 2024

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமைக்கான காலவரையற்ற வேலை நிறுத்தம்!

சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் தொழிற்சங்கம் அமைத்துக்கொள்ளும் உரிமைக்கான காலவரையற்ற வேலை நிறுத்தம்m

வேலூர் ஆக்.01-

வேலூர் மாவட்டம் தமிழக அரசு தலையிட்டு தீர்வு காண வலியுறுத்தியும் தொழிலாளர்களின் போராட்டத்திற்கு ஆதரவாகவும் மாவட்ட தலைநகரங்களில் 2024 அக்டோபர் 1ல் மாபெரும் ஆர்ப்பாட்டம்
செப்டம்பர் 9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வரும் சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்திற்கு ஆதரவை தெரிவித்துக்கொள்கிறோம்.
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று மாலை 5:45 மணி அளவில் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு வேலூர் மாவட்ட தலைவர் டிடி ஜோஷி தலைமை தாங்கினார் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் முனைவர் செ.நா.ஜனார்தனன் ஆர்ப்பாட்டத்தினை துவக்கி வைத்தார் 
கோரிக்கை விளக்க உரையினை மாவட்ட செயலாளர் பா வேலு மற்றும் மாவட்ட நிர்வாகிகள் தீனதயாளன் பேசினர். 

வருவாய்த்துறை அலுவலர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் தமிழ்நாடு அரசு அனைத்து மருந்தாளுநர் சங்க மாநில செயலாளர் வேந்தன் எம்ஆர்பி செவிலியர்கள் மேம்பாட்டு சங்கத்தின் மாநில துணைத்தலைவர் ஹேமச்சந்திரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். 
தமிழ்நாடு கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஆர் சேகர் ஆர்ப்பாட்டத்தில் நிறை உரையாற்றினார்.
தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருபெரும்புத்தூரில் சாம்சங் இந்தியா நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் கடந்த 16 ஆண்டுகளாக தொழிற்சங்கம் இல்லாமல் பணியாற்றி வந்துள்ளனர். இவர்கள் தங்களின் உரிமைகளை பெறுவதற்காக கடந்த ஜுன் மாதத்தில் சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சங்கத்தை தொடங்கியுள்ளனர். சங்கம் அமைக்கப்பட்டது முறையாக நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர். கடுமையான கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில்தான் சங்கம் அமைக்கும் உரிமை வேண்டும் மற்றும் கூட்டு பேரம் பேசும் உரிமை உள்ளிட்ட நாட்டில் சட்டங்கள் வழங்கியுள்ள உரிமைகளை நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தி கடந்த செப்டம்பர் 9ஆம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சாம்சங் இந்தியா ஆலையின் மொத்தம் தொழிலாளர்கள் 1723 பேர்களில் சுமார் 90 சதவீதம் பேர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.

தொழிலாளர்களின் பிரதான கோரிக்கை பெரும்பான்மை சங்கத்துடன் நிர்வாகம் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்பது. ஆனால் சாம்சங் இந்தியா நிறுவனம் அச்சங்கத்துடன் பேச மறுத்து அடக்கு முறைகளை கையாண்டு வருகிறது. இந்நிறுவனம்
உலகில் அவப்பெயர் பெற்ற நிறுவனம். நமது நாட்டில் ஜனநாயக உரிமைகளை அடக்க முயல்கிறது. தொழிற்சங்க சட்டம் 1926 மற்றும் தொழிற்சங்க தகராறு சட்டம் 1947, ஐ.எல்.ஓ. தீர்மானம் 87,98, சர்வதேச தொழிலாளர் தரநிலை ஆகியவற்றின் மூலம் வழங்கப்பட்ட உரிமைகளை அப்பட்டமாக மீறுகிறது.

 காவல்துறை தடுத்து நிறுத்தி அச்சுறுத்தலுக்கும் துன்புறுத்தலுக்கும் ஆளாக்கியுள்ளது.

தங்களது சட்ட பூர்வமான ஜனநாயக உரிமையை வலியுறுத்தி போராடும் சாம்சங் இந்தியா தொழிலாளர்களை காவல்துறை கைது, மிரட்டுவது. அச்சுறுத்துவது, அதிகாரத்துடன் நடந்துகொண்டு போராட்டங்களை நடத்தவிடாமல் தடுப்பது போன்ற நடவடிக்கைகள் முழுக்க முழுக்க கார்ப்பரேட் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான நடவடிக்கையாக தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பார்க்கிறது.

இத்தகைய செயல்பாட்டினை தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. 

எனவே தடுத்து வைக்கப்பட்டுள்ள தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுவிக்க
வேண்டும். தொழிற்சங்கத்தை உடனே பதிவு செய்ய வேண்டும். பெரும்பான்மை சங்கத்தோடு நிர்வாகம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். தொழிலாளர்களின் சட்ட பூர்வ உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யவும், தொழிலாளர் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தொழிலாளருக்கு உரிய பாதுகாப்பை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட

கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தி  மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது என தெரிவித்தனர். 

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad