கே வி குப்பம் அக்.01-
வேலூர் மாவட்டம் இலத்தேரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நாட்டு நலப்பணிதிட்ட சிறப்பு முகாமில் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சியின் இந்தியன் ரெட்கிராஸ் சங்க காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் அளித்தார்
ஏழுநாட்கள் நடைபெறும் இந்த சிறப்பு முகாம் நிகழ்விற்கு பள்ளியின் தலைமையாசிரியர் கு.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். உதவித்தலைமையாசிரியர் பி.குமார் வரவேற்று பேசினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கே.எ.குப்பன், துணைத்தலைவர் பி.முருகேசன், கௌரவ தலைவர் கே.ருத்ரன், அரும்பாக்கம் மோட்டுர் பள்ளியின் தலைமையாசிரியர் எஸ்.சிவராஜ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஜுனியர் ரெட்கிராஸ் ஆலோசகர் எஸ்.ரகுபதி முகாம் ஒருங்கிணைப்பு செய்தார்.
சுத்தம் சுகாதாரம் மற்றும் முதலுதவி குறித்த விழிப்புணர்வு பயிற்சியினை இந்தியன் ரெட்கிராஸ் சங்கத்தின் காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் செயல் விளக்கம் அளித்தார்.
அப்போது அவர் அளித்த செயல் விளக்கம்.. முதல் உதவியாளர் செய்ய வேண்டிய செயல்பாடுகள் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் மயக்க நிலையில் இருந்தால் எப்படி முதலுதவி அளிப்பது, செயற்கை சுவாசம் அளிக்கும் முறை, பாம்புக்கடி, விஷபூச்சிக்கடி, காயம் ஏற்பட்ட பகுதியயில் ரத்த ஒழுக்கை தடுப்பதற்கான நடைமுறைகள் உள்ளிட்ட நேரங்களில் செய்யக் கூடிய முதலுதவி குறித்து செயல் விளக்கம் அளித்தார்.
கல்வி உலகம் பள்ளி தலைமையாசிரியர் எஸ்.எஸ்.சிவவடிவு, தலைமைப்பன்பு கல்வியின் அவிசியம் குறித்து பேசினார்.
முதுகலை ஆசிரியர் வரதராஜன், இடைநிலை ஆசிரியர் கோவிந்தராஜ், எஸ்.கிருஷ்ணமூர்த்தி, சி.ஜெயக்குமார், எஸ்.ரகுபதி, ஆனந்தகுமார், சந்தர், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் பள்ளி வளாகம் தூய்மை, கோயில் வளாகம் தூய்மை, சாலை செப்பனிடுதல், தெருக்கள் தூய்மை பணிகளை மேற்கொண்டனர். மேலும மருத்துவமணை பார்வையிடுதல் பிளாஸ்டிக் ஒழிப்பு போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உள்ளிட்ட செயல்களையும் மேற்கொள்ளுகின்றனர்.
முடிவில் உயர்நிலை உதவித்தலைமையாசிரியர் ஜெ.சிவக்குமார் நன்றி கூறினார்.
இலத்தேரி நாட்டு நலப்பணி திட்ட சிறப்பு முகாமில் முதலுதவி பயிற்சியினை ரெட்கிராஸ் சங்க காட்பாடி கிளை அவைத்தலைவர் செ.நா.ஜனார்த்தனன் செயல்விளக்கம் அளித்த போது எடுத்த படம் உடன் தலைமையாசிரியர் கு.கார்த்திகேயன் உதவித்ஆசிரியர்கள் பி.குமார், டி..ஜெயக்குமார் ஆகியோர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment