பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தின் கீழ் ஊராட்சி மன்ற தலைவர் பண மோசடி பாதிக்கப்பட்டவரை மிரட்டல் எஸ்பி அலுவலகத்தில் புகார் மனு.
வேலூர், அக்16-
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி நந்தகுமார் பண மோசடி செய்ததாக ஆதிதிராவிடர் மக்களை ஏமாற்றி 200000 (இரண்டு லட்ச ரூபாய்) பணத்தை ஏமாற்றி பாதிக்கப்பட்டவர்களை மிரட்டி வருவதாக ஊராட்சி மன்ற தலைவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ் பி அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த மகிமண்டலம் ஊராட்சி மன்ற தலைவர் பிரியதர்ஷினி நந்தகுமார் சம்பந்தப்பட்ட கிராமத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்தில் சுரேஷ்குமார் (ஆதிதிராவிட சமூகத்தைச் சேர்ந்த) என்பவருக்கு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது எனக்கூறி 20000 கொடுத்தால் உங்களுக்கு வீடு கட்டித் தரப்படும் என ஊராட்சி மன்றம் தலைவர் தெரிவிக்க 20,000 லஞ்சம் பெற்றுக்கொண்டு 2, 25,000 கையாடல் செய்துள்ளார் சம்பந்தப்பட்டவரின் வங்கி கணக்கு ஏடிஎம் கார்டைகளை ஊராட்சி மன்ற தலைவர் வைத்துக்கொண்டு மிரட்டல் பாதிக்கப்பட்டவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதன்கிழமைகளில் நடைபெறும் மக்கள் குறை கூட்டத்தில் இன்று புகார் மனு அளித்தனர். மோசடி செய்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தரும் மாறும் அவர் மீது வழக்கு பதிய வேண்டும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கோரிக்கை மனு வைத்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment