செட்டிகுப்பம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம்
குடியாத்தம் அக்.3-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் ஊராட்சியில் காந்தி ஜெயந்தி முன்னிட்டு கிராம சபா கூட்டம் செட்டிகுப்பம் அரசு மேல்நிலைப் பள்ளியில் அருகே ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா ரவிச்சந்திரன் தலைமையில் மகாத்மா காந்தி திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு வணங்கி கிராம சபா கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் துணை தலைவர் சுரேஷ்பாபு முன்னிலை வகித்தனர் கிராம சபா கூட்டத்தில் பொது மக்களின் கருத்துக்களை கேட்டு கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன கூட்டத்தில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பொது மக்கள் உள்ளிட்ட அரசு துறை காவல்துறையினர் தூய்மை பணியாளர்கள் சார்ந்தவர்கள் கலந்து கொண்டனர் முடிவில் ஊராட்சி செயலர் பரந்தாமன் நன்றி கூறினார்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment