சாம்சங் தொழிலாளர்களுக்கு  ஆதரவாக இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Wednesday, 9 October 2024

சாம்சங் தொழிலாளர்களுக்கு  ஆதரவாக இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்!

சாம்சங் தொழிலாளர்களுக்கு  ஆதரவாக இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பும் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியும் இணைந்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

வேலூர்,அக 9-

வேலூர் மாவட்டம் TNPTF & STFI சார்பில்  இன்று மாலை வேலூரில் ஆதரவு ஆர்ப்பாட்டம்  இன்று 09.10.2024 மாலை 5.00 மணி வேலூர் அண்ணாசலையில் உள்ள அண்ணாகலையரங்கம், தெற்கு காவல் நிலையம் எதிரில்  சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு ஆர்ப்பாட்டம் வாழ்வாதாரத்திற்காக போராடும் 1500 சாம்சங் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து  தொழிலாளர் உரிமைகளை மீட்டெடுக்க நாம் களம்புக வேண்டிய காலகட்டத்தில் இருப்பதால்  சாம்சங் தொழிலாளர்களுக்கான ஆதரவு ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் நடைபெற்றது .

இன்றைய ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட செயலாளர் ஆ ஜோசப் அன்னையா தலைமை தாங்கினார் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினர் மற்றும் தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் முனைவர் செ.நா. ஜனார்த்தனன் தொடக்க உரையாற்றினார் 
மாநில துணைத்தலைவர் ரஞ்சன் தயாளதாஸ் சிறப்புரையாற்றினார் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் ஆர் ஜெயக்குமார் வேலூர் கன்னி மாவட்ட தலைவர் வீ.திருக்குமரன் மாநிலத் துணைத் தலைவர் ஜெயபிரகாஷ் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாவட்ட தலைவர் எம் எஸ்.செல்வகுமார் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில துணைத்தலைவர் பெ.இளங்கோ ஜாக்டோ செய்தி தொடர்பாளர் வாரா உறுதிமொழி ஆசிரியர் சங்க மாநில செயலாளர் முகமது ஷாநவாஸ் கல்வித்துறை நிர்வாக அலுவலர் சங்க முன்னாள் மாநில தலைவர் ஆர் சேகர் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பா வேலு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் பாதுகாப்பார் சங்க நிர்வாகி வீரபாண்டியன் அணைக்கட்டு வட்டார செயலாளர் தினேஷ் குமார் காட்பாடி வட்ட செயலாளர் காட்பாடி வட்டார செயலாளர் தெய்வசிகாமணி கணியம்பாடி வட்டார செயலாளர் குமாரசாமி ஆபிரகாம் ஆகியோர் வாழ்த்தி பேசினர் முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் ஆர் செல்வம் வரவேற்று பேசினார் முடிவில் மாவட்ட பொருளாளர் எஸ். சபிதா நன்றி கூறினார் அனைத்து வட்டார தலைவர் செயலர் பொருளர் இயக்க முன்னோடிகள் தோழர்கள் மாவட்ட துணைத் தலைவர்கள் மாவட்ட துணைச் செயலாளர்கள் கல்வி மாவட்ட தலைவர்கள் கல்வி மாவட்ட செயலாளர்கள் மற்றும் அனைத்து வட்டார பொறுப்பாளர்கள் இயக்கத்தின் நாடி நரம்புகளான உறுப்பினர்கள் திரளாக போராட்டதில் பங்கேற்றனர்.

வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad