கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 10 October 2024

கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் இணைந்து எய்ட்ஸ் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி!

குடியாத்தம்,அக் 10-


வேலூர் மாவட்டம் குடியாத்தம் கே எம் ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி (தன்னாட்சி) செஞ்சுருள் சங்கம் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் அரசு மருத்துவமனை குடியாத்தம் இணைந்து நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் கலை நிகழ்ச்சி 
குடியாத்தம் புதிய பேருந்து நிலையத்தில் 10.10.2024 அன்று காலை 11-மணியளவில் நடைபெற்றது. 

கே. எம்.ஜி. கலை மற்றும் அறிவியல் கல்லூரி  செஞ்சுருள் சங்க ஒருங்கிணைப்பாளர் முனைவர் வே. வினாயகமூர்த்தி  இந்நிகழ்விற்கு தலைமை ஏற்று அனைவரையும் வரவேற்றார். குடியேற்றம் அரசு
மருத்துவமனையின்  மருத்துவ அலுவலர் மா. மாறன்பாபு அவர்கள் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்து,
எய்ட்ஸ் பரவும் முறை மற்றும் அதை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும், எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளை தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை என்றும், நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான  மருந்துகள்  அரசு மருத்துவமனையில் உள்ளது என்று பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும்  வகையில் உரையாற்றினார். குடியாத்தம் அரசு மருத்துவமனை பணியாளர்கள் உமேஷ் குமார், மோகன் பிரபு  மற்றும் கல்லப்பாடி மருத்துவமனையைச் சேர்ந்த ரமணி, பாரதி ஆகியோர்கள் இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். இந்த கலை நிகழ்ச்சியில் கே.எம்.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரி
சார்பில்  44 மாணவிகள்  எய்ட்ஸ் நோய் பற்றிய  விழிப்புணர்வு பாடலுக்கு நடனமாடியும்  பொது மக்களுக்கு துண்டு பிரசுரங்கள் வழங்கி எய்ட்ஸ் குறித்து விழிப்புணர்வு செய்தனர். நிகழ்ச்சி முடிவில் செஞ்சுருள் சங்க உறுப்பினர் முனைவர் எஸ். செல்வராஜ் நன்றி உரையாற்றினார்.

குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்

No comments:

Post a Comment

Post Top Ad