
பேரணாம்பட்டு, நவ 05-
வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு வனச்சரகத்திற்குட்பட்ட பத்தலபள்ளி கிராமத்தை சேர்ந்த தேவராஜ் த/பெ முனுசாமி (வயது 60) என்பவர் காட்டு பன்றி கறியை வீட்டில் சமைப்பதற்கு வைப்பதருப்பதாக வந்த தகவலை அடுத்து பேரணாம் பட்டு வனச்சரக அலுவலர் சதீஷ்குமார் அவர்களின் தலைமையில் இளையராஜா வனவர் பத்தலப்பள்ளி பிரிவு, மாதேஸ்வரன் வனவர் பல்லால குப்பம் பிரிவு,சிவன் வனக் காப்பாளர் சுகந்தன் வனக் காப்பாளர்,அரவிந்தசாமி வணக் காப்பாளர் ஆகியோர் குழுவாக விரைந்து சென்று தேவராஜ் என்பவரை பிடித்து விசாரணை செய்தனர். அவர் வீட்டில் காட்டுப்பன்றி கறியை சமைப் பதற்காக வைத்திருந்த து கண்டுபிடிக்க ப்பட்டது.அவர் காட்டு பன்றி கறி வைத்திருந்த வன குற்றத்திற்காக வேலூர் மாவட்ட வன அலுவலர் அவரின் உத்தரவுப்படி குற்றவாளிக்கு ரூபாய் 15,000 அபராதம் விதிக்கப்பட்டது.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment