தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 32 குழந்தைகள் மற்றும் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
வேலூர் ,நவ 8-
வேலூர் மாவட்டம் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் 32 குழந்தைகள் மற்றும் அறிவியல் மாநாட்டிற்கான வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம்
நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை என்ற தலைப்பில் ஆய்வு அறிக்கைகள் சமர் பிக்க 10 முதல் 17 வரையுள்ள மாணவ மாணவிகள் பங்கேற்கும் குழந்தைகள் அறிவியல் மாநாட்டிற்கான குழந்தைகள் பயிற்றுவிக்க வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாம் இன்று 08.11.2024 காலை 10 மணியளவில் வேலூர் அரசு முஸ்லீம் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.
வழி காட்டி ஆசிரியர்களுக்கான இந்த பயிற்சி முகாமிற்கு மாவட்ட தலைவர் மற்றும் மாநாட்டிற்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் பே.அமுதா தலைமை தாங்கினார். முன்னதாக மாவட்ட செயலாளர் செ.நா.ஜனார்த்தனன் வரவேற்று பேசினார். வேலூர் கிளைத் தலைவர் பேராசிரியர் கே.தேவி, செயலாளர் முத்து.சிலுப்பன், பொருளாளர் பா.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீரினால்பரவும் நோய்கள், நீர் பாதுகாப்பில் பாரம்பரிய நவீன தொழில்நுட்ப யுக்கத்திகள், நீர் சார்ந்த சுகாதாரமும் பொது மருத்துவமும், நீர் சூழலும் பாதுகாப்பும், நீர் அனைவருக்கு மானது என்ற 5 தலைப்புகளில் ஆக்சிலியம் கல்லூரி உதவி பேராசிரியை முனைவர் கே.வித்யா, டிகேஎம் கல்லூரி உதவி பேராசிரியர் முனைவர் வி.ரேகா, மாவட்ட துணைத்தலைவர் கே.விஸ்வநாதன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கு.செந்தமிழ்செல்வன், ஓய்வுபெற்ற மாவட்டக்கல்வி அலுவலர் கோபல.ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு அறிக்கை தயாரிப்பதற்கான வழிமுறைகளை செயல் விளக்கம் அளித்தனர். பள்ளிளின் தலைமையாசிரியர் பாஸ்கர், கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆர்.காயத்ரி, மாவட்ட இணை செயலாளர் என்.கோடீஸ்வரி, மாவட்ட பொருளாளர் வீரா.குமரன் தமிழ்நாடு அரசின் டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர் ஆ.ஜோசப்அன்னையா, திருப்பத்தூர் மாவட்ட இணை செயலாளர் ஜே.உதயகுமார் உள்ளிட்டோர் வாழ்த்தி பேசினர்.
வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி கையட்டினை தலைவர் பே.அமுதா செயலாளர் ஜனார்த்தனன் வெளியிட எழுத்தாளர் திரைப்பட வசனகர்த்தா அழகிய பெரியவன் மற்றும் நல்லாசிரியர் என் கோடீஸ்வரி ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
மாவட்டம் முழுவதும் இருந்து ஆசிரிய ஆசிரியைகள் பங்கேற்றனர்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment