அணைக்கட்டு, நவ 9-
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு சட்டமன்ற தொகுதி பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் உள்ள அரங்கநாதர் கோயிலிலிருந்து 5 ஆவது வார்டு பகுதி வரை உள்ள கழிவு நீர் கால்வாய் சுமார் 70 ஆண்டுகாலமாக தூர் வாராமல் புதர் மண்டி பாழாகி, சமூக விரோதிகளால் கால்வாய் ஆக்கிரமித்த அவல நிலையில் கழிவு நீர் வழிந்தோட வழி இல்லாமல் அடைப்பு ஏற்பட்டு துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாய நிலை இருந்தது.இதனை சரிசெய்யும் வகையில் அப்பகுதி பொதுமக்கள் தொகுதி MLA அவர்களிடம் கோரிக்கை விடுத்தனர். இதனைத் தொடர்ந்து இன்று வேலூர் மாவட்ட செயலாளர் ஏ.பி.நந்தகுமார் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து அதிகாரிகளை அழைத்து,கழிவு நீர் கால்வாய் செல்லும் வழியில் உள்ள ஆக்கிரமிப்புகளை JCB இயந்திரம் மூலம் அகற்றி கழிவு நீர் கால்வாய் அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.70 ஆவது ஆண்டுகால பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு கண்ட இச்செயலை பாராட்டி அப்பகுதி பொதுமக்கள் MLA அவர்களுக்கு நன்றி செலுத்தி மகிழ்ச்சி தெரிவித்தனர்.
வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
No comments:
Post a Comment