குடியாத்தம் அருகே
7 வயது சிறுமி வீட்டிலிருந்த தண்ணீரில் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழப்பு
குடியாத்தம், நவ 6-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் வட்டம், தனகொண்டபல்லி மதுரா, சைனகுண்டா கிராமத்தில் வசிக்கும் விஜயகுமார்- ஜான்சி தம்பதியரின் மகள் லிகிதா(வயது 7) ஒன்றாம் வகுப்பு படித்து வந்தவர் இன்று 06.11.2024 காலை 8.30 மணியளவில் மேற்படி நபரின் வீட்டின் அருகில் இருந்த தண்ணீர் தொட்டியில் லிகிதா குழந்தை தவறி விழுந்துள்ளது. மேற்படி குழந்தையை மீட்டு குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்று அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
தகவல் அறிந்த கிராமிய காவல் ஆய்வாளர் சாந்தி தலைமையில் போலீசார் சிறுமியின் சலடத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment