குடியாத்தம் அருகே கூலி தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு
குடியாத்தம் ,நவ 7-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கெங்கையம்மன் ஆலயம் எதிரில் வசிப்பவர் தமிழரசன் த / பெ வரதராஜ் (வயது 47)இவர் இன்று காலை கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டு விட்டு முனீஸ்வரன் கோயில் அருகில் அமர்ந்து கொண்டு இருந்தார்
அப்போது அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளர் விக்னேஷ் குமார் என்பவர் என்னை ஏன் முறைத்துப் பார்த்தாய் என்று கேட்டு மறைத்து வைத்திருந்த அறிவாளால் தமிழரசனை வெட்டியுள்ளார் இதனால் படுகாயமடைந்த தமிழரசன் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இது சம்பந்தமாக குடியாத்தம் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விக்னேஷ் என்பவரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment