புதிய கல்விக் கொள்கை புதிய ஓய்வூதிய திட்டம் ரத்து செய்யக்கோரி இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பினர் புதுடில்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் தர்ணா போராட்டம் வேலூரில் இருந்து ஆசிரியர்கள் புதுடெல்லி பயணம்
வேலூர் ,நவ 27-
வேலூர் மாவட்டம் ஆசிரியர் கூட்டமைப்பினர் பல்வேறு கோரிக்கை களுடன் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் புதிய கல்விக் கொள்கை புதிய ஓய்வூதிய திட்டம் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகியவற்றை ரத்து செய்யக்கோரி ஒன்றிய அரசை வலியுறுத்தி புதுடெல்லியில் உள்ள சந்தர் மந்தரில் நவம்பர் 29 ஆம் தேதி தர்ணா போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்
அகில இந்திய செயற்குழு முடிவின் படியும் தமிழ்நாடு மாநில குழு முடிவின் படியும் தமிழகத்தில் இருந்து 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் அகில இந்திய அளவில் பல்லாயிரக் கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்று தர்ணா போராட்டம் நடத்த உள்ளனர்.
இதுகுறித்து இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்திய செயற்குழு உறுப்பினரும் தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவருமான செ.நா.ஜனார்த்தனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.
புதிய கல்விக் கொள்கையினை ரத்து செய்ய வேண்டும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் புதிய ஓய்வூதிய திட்டம் ஆகிய திட்டங்களை ரத்து செய்ய வேண்டும் என ஒன்றிய அரசினை வலியுறுத்தி புதுடெல்லியில் தர்ணா போராட்டம் நாளை மறுதினம் ஜந்தர் மந்தரில் நடைபெற உள்ளது இந்த தர்ணா போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் இருந்து 20 க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில துணைத்தலைவர் ரஞ்சன் தயாள தாஸ் மாவட்ட செயலாளர் ஆ ஜோசப் அன்னையா ஆகியோர் தலைமையில் புறப்பட்டுச் செல்கின்றனர். தமிழக அளவில் இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் இணைந்துள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் சா மயில் தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சங்கர் தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலாளர் அன்பழகன் தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக கௌரவத்தலைவர் அ மா மாயவன் முன்னாள் சட்ட மேலவை உறுப்பினர் ஆகியோர் தலைமையில் 500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் புது டெல்லிக்கு புறப்பட்டு உள்ளனர்.
இந்திய அரசு இனியும் தாமதிக்காமல் புதிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் மேலும் புதிய ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும்.
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் என்பது எங்களிடமிருந்து பெறப்
படுகின்ற பங்குத் தொகையை வைத்து தரப் படுவதும் மேலும் அந்தத் தொகை அந்த பணியாளர் மறைவிற்குப் பிறகு அவருக்கோ அவரது குடும்பத்திற்கோ சென்று சேராத நிலையில் உள்ளதால் அந்த திட்டத்தினை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தினை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment