வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி சார்பாக காவல் நிலையத்தில் புகார் மனு
குடியாத்தம் ,நவ 27 -
வேலூர் மாவட்டம் குடியாத்தம் இந்து முன்னணி சார்பில் இந்து மதத்திற்கு எதிராகவும் ஐயப்ப சுவாமிகளின் மனதை கொச்சைப்படுத்தும் விதமாக பாடல் பாடிய கானா பாடகி இசை வாணி என்ற கிறிஸ்தவ பெண்ணை கண்டித்து அவருடைய படத்திற்கு செருப்பு மாலை அணிவித்தும் தொடப் பாத்தால் அடித்தும் ஊர்வலமாக சென்று குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது .
இதில் இந்து முன்னணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.ஆறுமுகம் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் S.அனீஸ் ப.யுவசங்கர் நகர பொறுப்பாளர்கள் சுஜித், மணி, S.R.யோகேஷ், ஆதி கேசவன், ஜெகன், பேரரசு புகழேந்தி, டைலர் குமார், ஆனந்த் , சரவணன், மாணிக்கம், தாமு, வெங்கட், ஜெகா நகரத் துணைத் தலைவர் லோகேஷ் ஒன்றிய தலைவர் ராஜேஷ், ஒன்றிய செயலாளர் மோகன், மற்றும் இந்து முன்னணியை சேர்ந்த பொறுப்பாளர்கள் ஐயப்ப பக்தர்கள் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment