ஒருங்கிணைந்த தமிழக முன்னாள் முப்படை வீரர்கள் மற்றும் வீர மங்கையர் அலுவலகம் திறப்பு விழா
குடியாத்தம் ,நவ 25-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த விநாயக புரத்தில் இன்று காலை ஒருங்கிணைந்த முப்படை வீரர்கள் மற்றும் வீர மங்கையர்கள் அலுவலக கட்டிடம் இன்று காலை திறக்கப்பட்டது
நிகழ்ச்சிக்கு தலைவர் டி. ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்றது
இந்நிகழ்ச்சிக்கு செயலாளர் எஸ் வெங்கடேசன் விசுவநாதன் மணி விஜயபாலன் சீனிவாசன் வஜ்ஜிரம்
ஆகியோர் முன்னிலை வகித்தனர்
பொருளாளர் குணசேகரன் வரவேற்புரை ஆற்றினார்
சிறப்பு அழைப்பாளர் மாவட்டத் தலைவர் ஜெ ஜெயகுமார் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜி ஆர் கிருஷ்ணமூர்த்தி சதீஷ் காட்பாடி தலைவர் கோபி கே வி குப்பம் தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்டத் தலைவர் ஜெ ஜெயகுமார் அவர்கள் அமைப்பின் கொடியேற்றினார் மூத்த முன்னோடிகள் மேகராஜ் சதீஷ் பாஸ்கரன் பார்த்திபன் கோபி ஆகியோர் கலந்து கொண்டு அலுவலகத்தைத் திறந்து வைத்தனர்
அமைப்பின் வீர மங்கையர்கள் லதா கோவிந்தராஜ் சுதா மகேஸ்வரி சுபிதா ஜெயக்குமார் அம்பிகா வெங்கடேசன் பத்மினி பரணி ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி தீபா ஆராதனைகள் செய்தனர் ஜெ ஜெயகுமார் ஜி ஆர் கிருஷ்ணமூர்த்தி மணி விஜயபாலன் சுப்பிரமணி சீனிவாசன் பத்மினி சுதா மகேஸ்வரி ஆகியோர் முக்கிய கருத்துகளை எடுத்துரைத்தனர்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து முன்னாள் இந்நாள் முப்படை வீரர்கள் மற்றும் வீர மங்கையர்கள் அனைவருக்கும் தேனீர் இனிப்பு வழங்கப்பட்டது
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment