வேலூர் மாவட்டம்
இருசக்கர வாகனம் திருடிய 3 வாலிபர்கள் கைது 31 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்
குடியாத்தம் ,நவ 25-
வேலூர் மாவட்டம்
குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி தலைமையில்
உதவி ஆய்வாளர் பத்மநாபன் உள்ளிட்ட போலீசார் கோபாலபுரம் பாலம் அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் அவர்கள் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி. குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இருசக்கர வாகனங்களை திருடி வந்தது விசாரணையில் தெரியவந்தது
இதனையடுத்து அவர்களிடமிருந்து 31 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த குடியாத்தம் போலீசார் எர்த்தாங்கல் பகுதியை சேர்ந்த இளவரசன் (வயது 22) வெங்கடேசன் (வயது 19) அக்வாரம் பகுதியைச் சேர்ந்த சந்துரு (வயது 19) ஆகிய மூன்று பேரை கைது செய்த குடியாத்தம் போலீசார் மேலும் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment