மேல் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான போதைப்பொருள் இல்லாத இந்தியா திட்டம் சார்பில் விழிப்புணர்வு பொதுக்கூட்டம்
பேரணாம்பட்டு நவ.29-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அடுத்த மேல் பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் போதைப்பொருள் இல்லாத மாணவர், மாணவிகளுக்கான போதை தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் மா. மனோகரன். தலைமை தாங்கினார். கு. சீனிவாசன் வரவேற்புரையாற்றினார். போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டம் கலைமாமணி பழனி ஐயா பிள்ளை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலக பணியாளர் அருள் பிரகாஷ், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் யுவராஜ் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் வா .கேசவன், போதைப் பொருள் இல்லாத இந்தியா திட்டம் உறுதி மொழியை வாசித்து நன்றி கூறினார்.
வேலூர் தாலுகா செய்தியாளர்
இன்ப ராஜ்
No comments:
Post a Comment