காட்பாடியில் இருசக்கர வாகனங்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Friday, 29 November 2024

காட்பாடியில் இருசக்கர வாகனங்களை குறி வைத்து தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

காட்பாடியில் இருசக்கர வாகன தொடர் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் கைது!

வேலூர்,நவ 29 -

வேலூர் மாவட்டம், காட்பாடி பகுதியில் பொதுமக்கள் கொண்டு வரும் இருசக்கர வாகனங்களை குறி வைத்து ஒரு கும்பல் தொடர்ந்து திருடி வந்தது. இது தொடர்பாக காட்பாடி காவல் நிலையத்தில் புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இதை தொடர்ந்து காட்பாடி காவல் கண்காணிப்பாளர் பழனி உத்தரவின் பேரில், காட்பாடி போலீசார் தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்டு வரும் கும்பலை வலை வீசி தேடி வந்தனர். இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா ராமாபுரம் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் (வயது 31) என்பவரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். இதையடுத்து அவரிடம் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த மூன்று இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதை தொடர்ந்து கைது செய்யப்பட்ட சக்தி வேல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி வேலூர் தொரப்பாடியில் உள்ள மத்திய ஆண்கள் சிறையில் காவலில் அடைத்தனர்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad