சாலையோரம் குவிந்துள்ள மண் மேடுகளை அகற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்!  - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Thursday, 28 November 2024

சாலையோரம் குவிந்துள்ள மண் மேடுகளை அகற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்! 

சாலையோரம் குவிந்துள்ள மண் மேடுகளை அகற்றிய மாநகராட்சி தூய்மை பணியாளர்கள்! 

வேலூர்,நவ.28 -

வேலூர் மாவட்டம் மண்டலம் 1 எல்லைக்கு உட்பட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகின்றது. இந்த மழையின் காரணமாக சாலையில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதில் மண்மேடு சாலையோரம் உருவானது. இதனால் இந்த சித்தூர் -கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் காட்பாடி அருகில் பலர் இருசக்கர வாகனங்களில் செல்வோர் விபத்தில் சிக்கும் அபாயம் நேரிட்டது. இதையடுத்து வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் உத்தரவின் பேரில்  சாலையோரம் குவிந்துள்ள மணல் மேடுகளை வேலூர் மாநகராட்சி காட்பாடி 1 ஆவது மண்டலத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் அதிரடியாக பாதுகாப்புடன் அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


வேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad