கே.வி.குப்பம் அரசு மகளிர்
பள்ளியில் தமிழ் கூடல் விழா !
வேலூர், நவ 30-
வேலூர் மாவட்டம்,
கே.வி.குப்பம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில்
தமிழ்க்கூடல் விழா நடைபெற்றது. பள்ளி தலைமை ஆசிரியை
சாந்தி தலைமை வகித்தார். இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர்கள். கெட்சி ஜெப செல்வி, ஹேமலதா ஆகியோர் முன்னிலை வகித்தனர் தமிழ்க் கூடல் விழாவிற்கு சிறப்பு விருந்தினராக பள்ளிகொண்டா அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியின் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற
பா.ஜெயக்குமார் சிறப்பு
அழைப்பாளராக கலந்து கொண்டு தமிழ் வெல்லும் என்ற தலைப்பில் இலக்கிய உரையாற்றினார்.
மேலும், மாணவர்களின் சார்பில் இயல் இசை நாடகம் நடைபெற்றது. முன்னதாக தமிழ் ஆசிரியர்.சீனிவாசன் வரவேற்புரையாற்றினார்.
ஆசிரியர்.ஜெசிந்தா ராணி நன்றி கூறினார். முதுகலை ஆசிரியர் அனுசுயா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
வேலூர் தாலுகா செய்தியாளர் மு இன்பராஜ்
No comments:
Post a Comment