தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
64 நபா்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது
குடியாத்தம் ,நவ 30-
வேலூர் மாவட்டம் குடியாத்தம் திருவள்ளுவர் மேல்நிலைப் பள்ளியில் இன்று வேலூர் மாவட்ட நிர்வாகம் வேலூர் மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நுறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர் புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் இன்று காலை நடைபெற்றது
நிகழ்ச்சிக்கு வருவாய் கோட்டாட்சியர் செல்வி சுபலட்சுமி தலைமை தாங்கினார் இதில் சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுலு விஜயன் அவர்கள் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கினார்
இந்நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் எஸ் சௌந்தரராஜன் ஒன்றிய பெருந்தலைவர் என் இ சத்யானந்தம்
குடியாத்தம் வட்டாட்சியர் மெர்லின் ஜோதிகா நகராட்சி ஆணையாளர் மங்கையர் கரசன் வட்டார வளர்ச்சி அலுவலர் வினோத்குமார் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பங்கேற்றனர்
இந்நிகழ்ச்சியில் 45க்கும் மேற்பட்ட தனியார் துறை நிறுவனங்கள் மற்றும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment