சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது கடத்தலுக்கு பயன்பட்ட இருசக்கர வாகன பறிமுதல்! - தமிழக குரல் - வேலூர்

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Tuesday, 5 November 2024

சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வந்தவர் கைது கடத்தலுக்கு பயன்பட்ட இருசக்கர வாகன பறிமுதல்!

22.160 கிலோ கிராம் குட்கா பொருட்கள் கடத்தி வந்தவர் கைது! கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு சக்கர வாகனம் பறிமுதல்!

பேர்ணாம்பட்டு ,நவ 5-

வேலூர் மாவட்டம்  பேரணாம்பட்டு சட்டவிரோதமாக குட்கா மற்றும் போதைப்பொருட்கள் விற்பவர்கள் மற்றும் கடத்துபவர்களை தடுக்க, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நா.மதிவாணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், இன்று 05.11.2024-ம் தேதி, பேர்ணாம்பட்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரவட்லா சாலையில், பேர்ணாம்பட்டு காவல் ஆய்வாளர். ருக்மான்கதன் தலைமையிலான போலீசார் மேற்கொண்ட சோதனையில், எதிரி தன்வீர் அகமது (வயது40) த/பெ. ஜமீல் அகமது, பேர்ணாம்பட்டு என்பவர், அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் புகையிலை, குட்கா மற்றும் போதைப் பொருட்களை விற்பனைக்காக இருசக்கர வாகனத்தில் கடத்தி வந்துள்ளார். Hans 16.500 கிலோ ,
Cool lip 0.957 கிலோ , 
Vimal Pan Masala 4.125 கிலோ, 
V1 Tobacco 0.577 கிலோ என மொத்தமாக 22.160 கிலோ கிராம் எடை கொண்ட ஹான்ஸ், குட்கா மற்றும் போதைப் பொருட்களை பறிமுதல் செய்து, கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட இருசக்கர வாகனம் ஒன்று பறிமுதல் செய்யப்பட்டு, எதிரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது.


வேலூர் மாவட்ட தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ் 

No comments:

Post a Comment

Post Top Ad