காட்பாடி தாராபடவேட்டில் பழைய கட்டடம் இடிந்து விழுந்ததில் சைக்கிளில் சென்ற முதியவர் உடல் நசுங்கி பலி!காட்பாடி, நவ.5-வேலூர் மாவட்டம், காட்பாடி சித்தூர் -கடலூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் தாராபடவேடு பகுதியில் பழைய கட்டடம் ஒன்று 1943 இல் கட்டப்பட்டது. இந்த கட்டடத்தின் கீழ் தளத்தில் இரும்பு விற்பனை செய்யும் கடை இயங்கி வருகிறது. இந்நிலையில் இன்று காலை இந்த பழைய கட்டடம் திடீரென இடிந்து விழுந்தது. இந்நிலையில் காட்பாடி கிளித்தான்பட்டறையைச் சேர்ந்த பாஸ்கர் என்ற (வயது 65) முதியவர் இந்த வழியாக சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது அவரின் மீது இந்த கட்டடத்தின் இடிபாடுகள் விழுந்தன. இதில் அவர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். இந்த கட்டடம் இடிந்து விழுந்ததும் கடலூர்- சித்தூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காட்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் பழனி தலைமையிலான போலீசார் மற்றும் காட்பாடி காவல் உதவி ஆய்வாளர் பழனி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இடிபாடுகளுக்குள் சிக்கி இறந்த பாஸ்கரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை தொடர்ந்து தடைபட்ட போக்குவரத்தையும் சரி செய்தனர். இது குறித்து காட்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது போன்ற பழைய கட்டடங்களை உடனடியாக அடியோடு இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என்று வேலூர் மாநகராட்சி காட்பாடி மண்டலம் 1 சேர்ந்த கட்டட ஆய்வாளர் இந்த கட்டடத்தின் உரிமையாளருக்கு நோட்டீசை விநியோகம் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதுவேலூர் தாலுகா செய்தியாளர் இன்பராஜ்
Post Top Ad
Tuesday, 5 November 2024
Home
Unlabelled
Re: பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் சைக்கிளில் சென்ற முதியவர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பலி!
Re: பழைய கட்டிடம் இடிந்து விழுந்ததில் சைக்கிளில் சென்ற முதியவர் உடல் நசங்கி சம்பவ இடத்திலேயே பலி!
About தமிழக குரல்
Subscribe to:
Post Comments (Atom)
Post Top Ad
தமிழக குரல்
தமிழகத்தின் வளர்ந்து வரும் செய்தி இணையதளம், செய்திகளை உடனுக்குடன் வழங்கிவரும் செய்தி நிறுவனம்.
No comments:
Post a Comment