காட்பாடி , நவ 24
தமிழ்நாடு மாநில ஜூனியர் ஆண்கள் கபடி போட்டி வேலூர் மாவட்டம் விளையாட்டு மேம்பாட்டு உள் அரங்கில் நடைபெற்து.
இந்த போட்டி வெள்ளி சனி ஞாயிறு மூன்று நாட்கள் நடைபெற்றது. இந்தப் போட்டியில் தமிழகத்தைச் சார்ந்த 38 அணிகள் கலந்து கொண்டனா் . நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினர் ஏபி நந்தகுமார் வேலூர் மாநகராட்சி துணை மேயர் சுனில் குமார் பெருங்குழு தலைவர் வேல்முருகன் காட்பாடி பகுதி செயலாளர் வன்னியராஜா மாநகராட்சி தலைவர் புஷ்பலதா வன்னிய ராஜா A.சபியுள்ளா மாநில அமைச்சூர்கபடி செயலாளர் தலை மையில் நடைபெற்றது. பூஞ்சோலை சீனிவாசன் அமைச்சூர்கபடி கழக தலைவர் பெருந்தலைவர் சேட்டு செயலாளர் கோபால் பொருளாளர் அம்மன் ரவி துணைத்தலைவர் பாரதிதாசன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தவமணி போன்றோர் முன்னிலை வகித்தனர்.
போட்டியை ஒருங்கிணைத்து அனைவருக்கும் தங்குமிடம் உணவு போன்றவற்றை மாவட்ட பொருளாளர் அம்மன் ரவி சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் இந்த போட்டியின் நடுவர்களாக 40 க்கும் மேற்பட்டோர் பணியாற்றினார். இரண்டாம் நாள் போட்டியை அமைச்சூர்கபடி கழக துணைத் தலைவர் இராசி தலித் குமார் துவக்கி வைத்தார். இந்த நிகழ்வில் முன்னாள் கபடி வீரர்கள் அரசியல் பிரமுகர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
குடியாத்தம் தாலுகா செய்தியாளர் கே வி ராஜேந்திரன்
No comments:
Post a Comment