அரசுப்பள்ளி மாணவர்களிடையே
மாவட்ட அளவிலான வானவில் மன்ற போட்டிகள்
காட்பாடி ,நவ 22-
வேலூர் மாவட்டம் அரசு பள்ளி மாணவர்களிடையே அறிவியல் பழகு- சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அறிவியல் மற்றும் கணித அணுகுமுறைகள் என்ற தலைப்பில் மாவட்ட அளவிலான வானவில் மன்ற மாவட்ட அளவிலான போட்டி, வேலூர் மாவட்டம் காட்பாடி அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில் இன்று நடைபெற்றது,
தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூலம் 23 பள்ளிகள் 24 குழுக்கள் அறிவியல் பழகு மாவட்ட அளவிலான போட்டிகளில் பங்கேற்றனர்.
இதில் 7 ஒன்றியங்களிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் வந்திருந்தனர், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் வேலூர் மாவட்ட உதவி திட்ட அலுவலர்(பொறுப்பு) திரு. கே.எம். ஜோதீஸ்வரபிள்ளை அவர்கள் தலைமை தாங்கி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். அனைவருக்கும் கல்வி திட்ட ஒருங்கிணைப்பாளர் சுகுமாறன் முன்னிலை வகித்து பேசினார். வானவில் மன்ற மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.சுப்பிரமணி, தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வேலூர் மாவட்ட செயலாளர் முனைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள்.
முன்னதாக வானவில் மன்ற வேலூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சா.குமரன் வரவேற்று பேசினார். இணை ஒருங்கிணைப்பாளர் கே விஸ்வநாதன் மற்றும் வட்டாரக்கல்வி அலுவலர் மு.சரவணன் பள்ளிக் கல்வித் துறையின் வானவில் மன்ற திட்ட ஒருங்கிணைப்பாளர் சாந்தி ஒருங்கிணைத்தனர்.
மாணவர்களின் படைப்புகளை வானவில் மன்ற கருத்தாளர்கள் வென்னிலா மற்றும் சரஸ்வதி உதவி திட்ட அலுவலர் (பொறுப்பு) கே.எம்.ஜோதீஸ்வரபிள்ளையிடம் வழங்கினர். மாவட்ட
ஒருங்கிணைப்பாளர்கள் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி தமிழ்நாடு அறிவியல் இயக்கம், எய்டு இந்தியா நிறுவனம் ஆகியோர் நிகழ்ச்சியை முன் நின்று வழிநடந்தினர், துறை சார்ந்த சிறப்பு ஆசிரியர்கள் நடுவர்களாக செயல்பட்டு மாணவர்களின் படைப்புக்களை மதிப்பீடு செய்தனர்,
இப்போட்டியில் வெற்றி பெறும் மாணவர்கள் நான்கு குழுக்களாக தேர்ந்தெடுக்கப்படுவர் அவர்கள் மாநில அளவிலான போட்டியில் கலந்துகொள்வார்கள்.
நிகழ்ச்சிக்கு மாணவர்களை பள்ளி ஆசிரியர்கள் பொறுப்பேற்று அழைத்துக் கொண்டு வந்து மாணவர்களுடைய எதிர்கால வாழ்க்கைக்கு வழி வகுத்து கொடுத்ததும் சிறந்த ஆராய்ச்சியாளர்களாக எதிர்காலத்தில் மாணவர்கள் உருவாவதற்கு பள்ளி நிர்வாகமும் பள்ளிக் கல்வித் துறையும் பொறுப்பேற்று மிகச் சிறப்பாக நிகழ்ச்சி நடைபெற்றது .
முடிவில் ஆசிரியை தமிழரசி நன்றி கூறினார்.
வேலூர் தலைமை செய்தியாளர் மு பாக்யராஜ்
No comments:
Post a Comment